பிணத்திற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள்! பரபரப்பு தகவல்

dead_body_004ஆந்திராவில் பிணத்துக்கு மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாசம் மாவட்டம் பாப்பாயி பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (30). இவர் கடன் தொல்லை காரணமாக இவர் விஷம் குடித்தார்.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் சீராளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாகராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் 2 நாள் கழித்தே எதுவும் சொல்ல முடியும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் மருத்துவ செலவுக்காக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கட்டும்படியும் கூறியுள்ளனர். அதன்படி உறவினர்களும் பணத்தை கட்டினர்.

அதேபோல் 2 நாள் கழித்து சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். அதனால் மேலும் ரூ.1 லட்சம் கட்டும்படி கூறியுள்ளனர்.

அதற்கு நாகராஜ் உறவினர்கள் எங்களிடம் பணம் இல்லை. ஊருக்கு சென்று யாரிடமாவது கடன் வாங்கி கட்டி விடுகிறோம். நீங்கள் சிகிச்சையை அளியுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், பணம் இல்லாவிட்டால் நீங்கள் நோயாளியை குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து வேறு வழியின்றி அவரை குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் இறந்து ஒருநாள் ஆகி விட்டது என்றனர்.

இதனால் ஆவேசம் அடைந்த நாகராஜ் உறவினர்கள் நாகராஜ் பிணத்தை எடுத்து கொண்டு அந்த தனியார் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துமனையின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து நொறுக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொலிசார் தலையிட்டு சமசரம் செய்தும் போராட்டத்தை கைவிடவில்லை.

அவர்கள் பணத்துக்காக பிணத்துக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வற்புறுத்தினார்கள்.

பொலிசார் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். -http://www.newindianews.com

TAGS: