தெலுங்கன் ராசபக்சே திருப்பதிக்கு வருவதில் வியப்பென்ன ?

mahinda_rajapaksaஅறநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆக்கிரமித்துக்கொண்ட இசுலாமியர்களை விரட்டுகிறேன் என்ற சாக்கில் மதுரைக்கு படையெடுத்து வந்த குமார கம்பணன் என்ற தெலுங்கு வடுகன், முசுலிம்களை விரட்டிவிட்டு தமிழகத்தை தானே கைப்பற்றி தனது பிரதானிகளைக் கொண்டு ஆளத்தொடங்கினான். விசயநகர அரசை நிறுவிய அரிகரர், புக்கர் இருவரில் புக்கரின் புதல்வன்தான் இந்த குமார கம்பணன்.

அதன்பிறகு நூற்றாண்டுகள் கழித்து விசயநகர மன்னனாயிருந்த கிருட்டினதேவராயரின் மதுரை பிரதானியாக இருந்த நாகம நாயக்கன் கலகம் செய்யத் தொடங்கினான், காரணம் கிருட்டினதேவராயன் பலிசா வகுப்பைச் சேர்ந்தவன். கொல்லவார்கள் நிறுவிய விசயநகர பேரரசை வஞ்சகமாக கவர்ந்துக் கொண்டவர்கள் பலிசாக்கள் என்பதால் கம்மவார் வகுப்பைச் சேர்ந்த நாகம நாயக்கன் இந்த கலகத்தை தொடங்கினான். கிருட்டினதேவராயன் ஒரு சமாதனத்திற்கு உட்பட்டு, நாகம நாயக்கன் மகனான விசுவநாத நாயக்கன் மதுரையை தலை நகராக்கிக்கொண்டு தமிழகத்தை ஆளட்டும் என விசுவநாத நாயக்கனை மதுரை நாயக்கனாக்கினான். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தான் கிருட்டினதேவராயன். தமிழகம் கடைத் தேங்காய் ஆனது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட முதல் தெலுங்கு மன்னனான இந்த விசுவநாத நாயக்கனின் பேரன் குமார கிருட்டினப்ப நாயக்கன் இலங்கைக்கு படையெடுத்துச் சென்று பாம்பு கடித்து இறந்து விடுகிறான். அவருடைய மைத்துனன் கவரா நாய்டு சாதியைச் சேர்ந்த விசய கோபால நாயக்கர் கவரை இனத்தவரையும் சில்லவாருகளையும் படை சேர்த்துக்கொண்டு இலங்கை சென்று குமார கிருட்டினப்பா நாயக்கன் விட்டுச்சென்ற படையையும் இணைத்துக்கொண்டு இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொள்கிறான். இதுவே பின்னாளில் கண்டி அரசாக விரிவாக்கம் பெறுகிறது. ஆந்திராவிலிருந்து இலட்சம் இலட்சமாய் தமிழகம் வந்தேறிய தெலுங்கு வடுகர்கள் தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் இலங்கைக்கு குடியேறி விசய கோபால நாயக்கர் அரசை, அதாவது கண்டி அரசை வலுப்படுத்துகிறார்கள்.

முதலியார்கள் என்று இலங்கையில் அழைக்கப்பட்ட, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட வெள்ளாளர்களிடமிருந்து வளமான விலைநிலங்களைக் கைப்பற்றிக் கொண்ட இந்த முரட்டு நாயக்கர்கள், அந்த முதலியார்களை மட்டுமன்றி நாடார் சாதியைச் சார்ந்த தமிழர்களையும் அங்கிருந்து இலங்கையின் நாலாதிசைக்கும் விரட்டிவிட்டார்கள்.

கண்டி நாயக்கர்கள் மதுரை, தஞ்சை நாயக்கர்களின் உறவினர்கள் என்பதால் அவர்களிடமிருந்து தேவைப்படும் போதெல்லாம் இவர்கள் படையுதவி பெற்று வந்தார்கள். மேலும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பல்லாயிரக்கணக்கில் கம்மா நாயடுகளும், கவரா நாயடுகளும் குடியேறி அவர்கள் இலங்கையில் ஒரு வலுத்த சாதியினர் ஆகிப்போனார்கள்.

கண்டி அரசர்கள் மதுரையில் மீனாட்சி ராணியோடு நாயக்கர் வம்சம் முடிவுக்கு வரும் வரை மதுரையிலிருந்தே பெண் கொண்டார்கள். மதுரை நாயக்க வம்சம் முடிந்த பின்னாலும் ஏனைய தெலுங்கு பாளையக்காரர்கள் குடும்பங்களிலயே இவர்கள் மணவினைகளைத் தொடந்தார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் இதுதான். மதுரையில் மீனாட்சி ராணியோடு நாயக்கர் வம்ச ஆட்சி முடிவு பெறுகிறது. அப்பொழுது கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னன் . வீர நரேந்திர சிங்க நாயக்கன் இவன் காலம் வரையில் கண்டி நாயக்கர்கள் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார்கள். யாழ்பாண அரசை ஆண்ட தமிழ் மன்னர்களும் இந்துக்கள் .கோட்டை அரசை ஆண்ட சிங்களர்கள் மட்டுமே பௌத்தர்கள்.

யாழ்ப்பாண அரசு – தமிழர்கள் – இந்துக்கள்
கண்டி அரசு -தெலுங்கர்கள் – இந்துக்கள்
கோட்டைஅரசு -சிங்களர்கள் – பௌத்தர்கள்

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் இலங்கையிலிருந்த கண்டி அரச குடும்பத்தினரும் அவர்களது குடிகளுமான தெலுங்கர்களும், தங்கள் இருப்பையும் , பிழைப்பையும் இலங்கையில் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தந்திரமான முடிவினை எடுக்கிறார்கள். தெலுங்கு நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் முடிந்துவிட்டதால் இனி இலங்கையில் ஏதேனும் யுத்தம் என்றால் முன்னைப்போல மதுரையில் இருந்து தெலுங்கர் படை கண்டி தெலுங்கு மன்னருக்கு உதவிக்கு வராது என்பதால், இலங்கையில் இந்துக்களாக இருக்கும் சிறுபான்மைத் தமிழர்களை விட பெரும்பான்மை இனமான சிங்களரோடு இணக்கமாகப் போவதுதான் பிழைக்கும் வழி, என முடிவு செய்து இந்த தெலுங்கர்கள் அனைவரும் புத்த மதத்தை தழுவிக்கொண்டார்கள்.

தமிழகத்தில் இந்துமதத்தைக் காப்பாற்ற வந்ததாக பீற்றிக்கொண்ட இந்த தெலுங்கு வடுகர்களான கம்மா நாயுடுகளும் ,கவரா நாயுடுகளும் இலங்கையிலும் இந்துக்களான தமிழர்களோடு அல்லவா இணக்கமாக போயிருக்கவேண்டும்..? மாறாக பௌத்தத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியைத் தங்கள் தாய்மொழியாக வரித்துக்கொண்டு, கர்நாடகாவில் கன்னடர்களாக நடிப்பதைப் போல , தமிழ்நாட்டில் தமிழர்களாக நடித்துக்கொண்டு தங்களை தமிழினத் தலைவர்களாகவே காட்டிக்கொள்வதைப் போல இலங்கையிலும் சிங்களர்களைப் போல இன்றுவரை நடித்துக்கொண்டு இருகிறார்கள். ஆரம்பத்தில் இந்துக்கோவில்களை இடிக்காமல் இருந்த இந்த சிறிலங்கா மணவாடுகள் பின்னாளில் தங்களைச் சிங்களர்கள் என்று உண்மைச் சிங்களர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்து கோவில்களை இடிப்பதிலும் , இந்துக்களான தமிழர்களை இனப்படுகொலை செய்வதிலும் இந்த சிறிலங்கா மணவாடுகள்தான் சிங்களர்களுக்கும் முன்னோடிகளாக இருந்திருகிறார்கள்.

கண்டி அரசர்களாக இந்த தெலுங்கர்கள் இருந்த போது புத்தரின் புனிதப்பல்லை கைப்பற்றித் தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொண்டார்கள். புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடமே இலங்கையின் ஆட்சி உரிமை இருக்க வேண்டும் என்ற இலங்கை பௌத்த மரபை அறிந்தே அவ்வாறு செய்தார்கள்.காரியவாதிகளான இந்த சிறிலங்கா மனவாடுகள் தங்கள் இனத்தாரில் பெருவாரியானோரை புத்தபிக்குகளாக்கி புத்த மத தலைமையையும் கைப்பற்றிக்கொண்டார்கள். சிங்கள இனவாதத்தை பின்னுக்குத் தள்ளி, பௌத்த மதவாதத்தை முன்னுக்கு கொண்டுவந்து, தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், என அனைத்தையும் இடித்துத் தள்ளுகிறார்கள். இனத்தால் தெலுங்கரான, மதத்தால் பௌத்தரான இந்த சகசாலக் கில்லாடி சிறீலங்கா மணவாடுகள் இலங்கையில் பௌத்த மத வாதத்தை முன்னுக்குக் கொண்டுவந்ததன் வாயிலாக இலங்கையின் அரசியலை முழுவதுமாக இன்று தங்கள் பிடிக்குள் வைத்துள்ளார்கள். இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளையும், சனதா விமுக்தி பெரமுனா என்ற தீவிரவாத கட்சியையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது இந்த சிறீலங்கா மணவாடுகளே!

சேன நாயக்க, பண்டார நாயக்கா, சந்திரிகா, குமாரதுங்கா, ராசபக்சே சகோதரர்கள் இவர்கள் அனைவரும் அன்று மதுரையிலிருந்து இலங்கை சென்ற அரவா மணவாடுகளின் வாரிசுகள்! இன்றைய சிறீலங்கா மணவாடுகள்! வைணவர்களான இவர்களின் விருப்ப தெய்வம் திருப்பதி ஏழுமலையான். எனவே தெலுங்கன் ராசபக்சே திருப்பதி வருவதில் வியப்பென்ன? ஆந்திர மணவாடுகள் சந்திரபாபு நாய்டுவும் வெங்கைய்யா நாய்டுவும் சிவப்பு கம்பளம் விரிக்க திருப்பதி வரும் சிறீலங்கா மணவாடு ராசபக்சேவிற்க்கு அரவா மணவாடு வைக்கோ எதிர்ப்பு தெரிவிப்பதுதான் வியப்பு!

பந்து போடுபவனும் தெலுங்கன். அடிப்பவனும் தெலுங்கன். கோட்டிற்கு வெளியே நின்று அடித்த பந்தை பொறுக்கிப் போட மட்டும் தமிழன்! தமிழக அரசியலை தமிழன் எட்ட நின்று பார்க்கலாம்! ரசிக்கலாம்! பதறலாம்! பரவசப்படலாம்! ஆனால் பங்கேற்க்கக்கூடாது! முடியாது!

-சீதையின் மைந்தன்
கச்சதீவு மீட்பு இயக்கம்
(தமிழர் உலகம் ஆன்றோர் சபை உறுப்பினர்)

-http://senkettru.com

TAGS: