இந்தியாவிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் குறித்து இந்திய உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவிலுள்ள என்ஜிஓக்கள் பலவும் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுள்ளதும், அதற்கு முறையாக கணக்கு காண்பிக்காததும் உளவுத்துறை கவனத்திற்கு வந்துள்ளது.
விசாரணை நடத்தியபோது, இந்த பணம் மதமாற்றங்களுக்கு பயன்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பெங்களூருவின் BIRD என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், கிறிஸ்தவ மதபோதகர்கள் சிறப்பான மார்க்கெட்டிங் மூலமாக இந்துக்களை மதமாற்றம் செய்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
மதகோட்பாடுகளுக்காக இன்றி, தங்களை வளப்படுத்திக்கொள்ள மதபோதகர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மதமாற்றங்களில் இறங்கியுள்ளதாக பெங்களூரு அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
மதமாற்றத்தில் பல வகை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கஷ்டப்படுபவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்து மதம்மாற்றுவது, வேலை வாங்கி கொடுத்து மதம்மாற்றுவது என்று மதமாற்றத்தில் பல வகைகள் உள்ளன. அப்படியும் மதம் மாற தவறினால் மிரட்டல்களும் நடப்பது உண்டு.
சில கிறிஸ்தவ மதமாற்றிகள், இந்து சாமியார்களை போல வேடம் அணிந்து வந்து, கிறிஸ்தவம்தான் உண்மையான மதம் என்றும், தாங்கள் இப்போதுதான் தெரிந்து கொண்டதாகவும் கூறி இந்துமக்களை ஏமாற்றுவதும் நடக்கிறது.
இந்தியாவிலுள்ள மதம்மாற்றும் மிஷினரிகள், என்ஜிஓக்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,500 கோடி பணம் நன்கொடையாக வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா, ஜேர்மனி, ஐரோப்பா, நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அதிக அளவு வருகிறது.
-http://www.newindianews.com
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் இதில் மதம் எங்கே இருந்து வந்தது.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று சொன்னது தமிழர் சமயம். இதில் ‘மதம்’ இல்லை.
பரபரப்பான வாழ்கையில் நிலை தடுமாறி ஐரோபிய நாடுகளில் பல கிறிஸ்துவ அன்பர்கள் ஆங்காங்கே ” ஹரே ராமா -ஹரே கிருஷ்ணா ” இந்து பக்தி இயக்கங்களில் சேர்ந்து அமைதியை தேட – இங்கே பணத்தால் மக்களை வளைக்கும் முயற்சி – வெல்வது போல தோன்றும் -ஆனால் வெல்ல முடியாது .பணத்தால் உணர்வை வாங்க்க முடியாது..