மகிந்தவுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு பாரதீயே ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவர்களில் ஒருவரான எல்.கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் தனி மனித ஒருவரின் சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும், இதனை பாரதீயே ஜனதா கட்சி கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் மகிந்தவுடன் நட்புறவை கொள்ளக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் அவருடன் நட்புறவு கொள்ளாமல் எப்படி தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்?
அவ்வாறு கூறுவது நோயாளியை பார்க்காமல், அவரது நோயை குணப்படுத்துமாறு வைத்தியரை கோருவதற்கு ஒப்பானது என்று அவர் கூறியுள்ளார்.
-http://www.pathivu.com
இவரைப் பார்த்தாதான் இப்ப நோயாளியைப் பார்த்த மாதிரி இருக்கு!. இவருக்கு மருத்துவர் மோடியோ?. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல இரந்துப் போன இத்தாலி பெண்மணி இன்று இல்லாமல் போய் விட்டார். இவர் இன்னும் கொஞ்ச நாளில் மருத்துவரைக் காணாமலே போய் விடுவார் போலிருக்கு. சிவ. சிவ.
இப்ப மகிந்தாவுடன் நட்புறவு கொள்வது தமிழர்களுக்காகவா அல்ல இந்தியாவின் பாதுகாப்பிற்காகவா?. இப்ப நோயாளி இந்தியா, மோடி நாடிப் போவது மருத்துவர் மகிந்தாவை. சொன்னது சரியா?. அறிவு இலாத கணேசா!. நீர் மோடிக்கு கேனையனா இரு. ஆனால் மற்ற தமிழரை கேனையனாக்கப் பார்க்காதே. உம்மை விட சிந்தனை அறிவுத் திறன் கொண்ட தமிழர் உலகெங்கும் பரவி இருக்கின்றனர் என்பதை மறந்து விடாதே அப்பனே!.
கணேசாஅவர்களே ! காங்கிரசை விமர்சித்த நீங்களெலாம் பா ஜா காவில் இருந்துக கொண்டு தமிழர்களுக்கு எதை சாதித்தீர்கள்? மகிந்தவுடன் உறவுக்கொண்டு மீனவர்களின் பிரச்சனையை தீர்தீர்கள? அல்லது இலங்கைத தமிழர்களின் பிரச்சனையாவது போக்கினிர்கள? மோடியுடன் கூடி ராஜபக்சேயை காப்பாற்ற ஏன் இந்த சப்பைக்கட்டு ?
மானம் கெட்ட கணேசா, ……
நரகத்தில் நிறைய காத்திருகிறார்கள் ,
உன்னோடு உறவாட ….!
கணேசாஅவர்களே,உண்மையிலே உங்களுக்கு அறிவு இருக்கிறதா?பல லட்ச தமிழர்களை படுகொலை செய்த பாவியை உன்னதமான தொழில் செய்யும் மருத்துவரோடு ஒப்பிடுகிறீர்.பதவி கிடைத்துவிட்டால் உங்கள் புத்தியை காட்டுகிறீர்.
எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்காதீர்கள். அரசாங்கம் என்னும் போது அவர்களுக்குச் சில கடப்பாடுகள் உள்ளன. இப்போது யாழ்ப்பணத்தில் உள்ள தமிழர்களுக்கு எந்த வித பாதுக்காப்பும் இல்லை. சிங்கள ராணுவத்தினரால் அனுதினமும் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர். பெண்கள் அனுபவிக்கும் நரக வேதனை வேறு. தமிழர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சருக்கே சிங்கள அரசாங்கம் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை. ஒரு முதலைச்சரை சாதாரண சிங்கள ராணுவ வீரன் கூட மதிப்பதில்லை. இந்த சூழலில் அங்குள்ள தமிழ் மக்கள் காப்பாற்றப் பட வேண்டும். அதற்கான வழிகள் காணப்பட வேண்டும். நல்லது நடக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு வழி காணப்பட வேண்டும். நீங்கள் தான் ஒரு வழி சொல்லுங்களேன்.