ஜம்மு காஷ்மீரில் 4 மற்றும் 5ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
கத்வாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி,
ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள். ஜனநாயகத்தில் வாரிசு அரயலுக்கு இடமில்லை. காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்களுக்கு இடமளிக்காமல், ஊழலில் திளைத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.
யாருடைய மகனோ பதவிக்கு வரவேண்டும் என்பதைவிட, வாக்காளர்கள் தங்களின் மகன்களும், மகள்களும் முன்னேற வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
பாஜகவுக்கு பெரும்பாண்மை பலத்துடன் வாக்களித்தால், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவோம். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என்றார்.
-http://www.nakkheeran.in
இன வெறியில் திளைத்து தவறு செய்தவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று எதிர் கட்சியும் பிரச்சாரம் செய்யலாமே. இது நாம சொல்லியா தெரிய வேண்டும்.
அங்கு நடக்கும் அநியாயங்களுக்கு அளவில்லை— பல சரித்திரபூர்வ தவறுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கு அரசியல் சட்டத்தை எல்லாருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். அங்கு வாக்கு வங்கி காரணமாக பல நியாயம் இல்லா சட்டங்கள் நடைமுறை படுத்தப்படிருக்கின்றன. அவை எல்லாம் திருத்தப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு உண்மையாக கடை பிடிக்கப்பட வேண்டும். அங்கு பணமும் அரசியலும் எல்லார் தலையிலும் மிளகாய் அரைத்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டில்; தினசரி தண்ணீர் போராட்டம். 67 ஆண்டுகளுக்கு பின்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழும் மக்கள் எவ்வளவு பேர்? அத்துடன் இந்தியன் திரைப்படத்தில் காண்பித்தது இன்றும் நடக்கின்றது. கேவலம்.