விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புக்களுடன் தொடர்பா? கவனம் செலுத்துவதாக இந்தியா அறிவிப்பு

ltte_logoவிடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா? என்று இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் புதுடில்லியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்பாயத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மக்கள் தீர்ப்பாயத்தில் கருத்துரைத்துள்ள தமிழக அரசாங்கம், 2009ஆம் ஆண்டு போரில் தோல்வி கண்ட பின்னர், விடுதலைப்புலிகள் இன்னமும் தமிழீழ கொள்கையை கைவிடவில்லை.

எனவே அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால், அது ஏனைய தீவிரவாத அமைப்புக்களுக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளது. -http://www.tamilwin.com

TAGS: