விமானத்தை கடத்தினால் இனி மரண தண்டனை

planeபுதுடில்லி: விமானத்தை கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, விமான கடத்தலை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை, ராஜ்ய சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இதில், ‘விமான கடத்தல் தடுப்பு சட்டம், 1982’ பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

* மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதியுடன், விமானங்களை கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.

* கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் விமானத்தை, விமான நிலையத்தில் இருந்து கிளம்பாமல் முடக்கி வைக்க, பாதுகாப்பு படையினருக்கு அனுமதி அளிக்கப்படும்.

* கடத்தல் விமானத்தை தடுத்து நிறுத்தி, அதன் மீது தாக்குதல் நடத்துவதற்கு, இந்திய விமானப் படையின் போர் விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

* கடத்தல் விமானத்தில் குண்டுகள் நிரப்பி, முக்கியமான இடங்களில் மோதி வெடிக்கச் செய்யும் நோக்கம் இருந்தால், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கான அதிகாரம் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்படும்.

* போன்கள் மூலமாக வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

-http://www.dinamalar.com

TAGS: