கிறிஸ்துமஸ் பண்டிகையில் 6 புது படங்கள் வெளியீடு காண்கிறது

chiristmesகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘பிசாசு’, ‘கயல்’, ‘கப்பல்’, ‘மீகாமன்’, ‘சுற்றுலா’, ‘வெள்ளைக்கார துரை’ ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன.

‘பிசாசு’ படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். டைரக்டர் பாலா தயாரித்து உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். திகிலான பேய் படமாக தயாராகியுள்ளது. மிஸ்கின் எடுக்கும் முதல் பேய் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது. கிறிஸ்துமசுக்கு முன்னதாக 19–ந்தேதி இப்படம் வருகிறது.

இதோடு ரிச்சர்ட் நடிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள ‘சுற்றுலா’ என்ற பேய் படமும் வருகிறது. இவ்விரு படங்களுக்கும் தணிக்கை குழுவினர் ‘யுஏ’ சான்று அளித்துள்ளனர்.

வருகிற 25–ந்தேதி பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படம் வருகிறது. 2004–ல் தமிழக கடலோர பகுதிகளை தாக்கி பேரழியை உண்டு பண்ணிய சுனாமியை மைய கருவாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவில் ‘யு’ சான்று கிடைத்துள்ளது.

ஷங்கர் தயாரிப்பில் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ள ‘கப்பல்’ படமும் கிறிஸ்துமஸ் அன்று வருகிறது. காமெடி படமாக தயாராகியுள்ளது. வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன் நடித்துள்ளனர். இந்த படமும் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

ஆர்யா, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள ‘மீகாமன்’ படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். காதல், ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. தணிக்கை குழு ‘யுஏ’ சான்று அளித்துள்ளது.

‘வெள்ளைக்கார துரை’ படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ளனர். எழில் இயக்கியுள்ளார். காதல் காமெடி படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரித்து உள்ளார். இந்த படத்துக்கும் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

-http://123tamilcinema.com

ஐ படத்தில் நடித்தது விக்ரம்தானா?: வியக்க வைத்த புகைப்படம்

vikrami‘ஐ’ படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டியும், குறைத்தும் கஷ்டப்பட்டு, அதே நேரத்தில் இஷ்டப்பட்டும் நடித்துக் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். இதை அவரே விருப்பப்பட்டு செய்ததாக கூறப்பட்டது.

தற்போது, ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதில், உடல் மெலிதான விக்ரம், ரொம்பவும் களைப்புடன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்தவர்கள் இது விக்ரம்தானா? என்று வியக்கும் அளவுக்கு அந்த படம் அமைந்துள்ளது.

‘ஐ’ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். எமிஜாக்சன் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளார். நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் வருகிற பொங்கலுக்கு முன்கூட்டியே வெளிவரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

-http://123tamilcinema.com

2015-லும் மிரட்ட வரும் ‘ர’ படக்குழுவினர்

raaபுதுமுகங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘ர’. படம் இயக்குனர் முதற்கொண்டு, படத்தில் நடித்திருந்த அனைவரும் புதுமுகங்களே. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில ரசிகர்களை மிகவும் குழப்பமடையவே செய்திருக்கிறது.

காரணம், இது பேய் படமா? அல்லது பேன்டஸி படமா? என்று அனைவரும் குழம்பியிருக்கிறார்கள். முதல் பாதியில் பேய் படம் போல் நகரும் கதைக்களம், இரண்டாம் பாதியில் பேன்டஸி படமாக நகர்வதுதான் குழப்பத்திற்கு காரணம்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது. ஒரு கதையை இரு வேறு தளங்களில் பயணிக்கும் வகையில் படமாக்குவது என்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. இந்த புதிய முயற்சியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தவே இந்த முறையை கையாண்டோம் என்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, படத்தில் சிவப்பு கதவு ஒன்று வரும். அது மனித மூளையின் செயல்பாட்டை குறிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம். இதேபோல், மனிதனின் ஆழ்மனதில் உருவாகும் உணர்வுகளை முக்கிய பதிவுகளாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக படத்தில் இடம்பெறும் அஜய் கதாபாத்திரத்தை அமைத்திருத்தோம்.

2014-ல் அனைவரையும் மிரட்டிய நாங்கள், மீண்டும் 2015-லும் மிரட்ட வருகிறோம் என்றார்கள்.

-http://123tamilcinema.com