ஜெயப்பிரதா மகன் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உயிரே உயிரே. இதில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார்.
ராஜசேகர் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த சத்யம், படத்தை டைரக்டு செய்தவர். ஜெயப்பிரதாவே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதன் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
சமீபத்தில் ரஜினியை ஜெயப்பிரதா நேரில் சந்தித்து ‘உயிரே உயிரே’ படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்து ரஜினியும் பாராட்டினார். அத்துடன் தியேட்டர்களில் தனது ‘லிங்கா’ படத்துடன் இணைத்து அந்த டிரெய்லரை வெளியிடவும் ஏற்பாடு செய்தார்.
அதுமட்டுமின்றி உயிரே உயிரே படத்தில் கவுரவ தோற்றத்தில் சில காட்சிகளில் நடிக்கவும் சம்மதித்தாராம். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியும் ஜெயப்பிரதாவும் ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. அதனாலேயே இந்த படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். ரஜினி நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக உள்ளது.
காதல் கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. சித்துவும், ஹன்சிகாவும் சென்னையில் இருந்து விமானத்தில் கோவா புறப்படுகின்றனர். அவர்களுக்குள் நடக்கும் மோதலும் காதலுமே கதை.
சென்னை விமான நிலையத்தில் முக்கிய காட்சிகள் படமாகி உள்ளது. கோவாவிலும் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.
-http://123tamilcinema.com


























கடவுள் இல்லை என்று நான் கோவிலுக்கு போனதில்லை ,பிரபஞ்சகத்தின் கடவுளான நீங்கள் ,எங்களுக்கு ஒரு கடவுளை அறிமுகம் செய்தீர்கள் ,அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் .இந்த உலகம் அழிந்தாலும் அடுத்த மனித பிறவி உங்கள் பெயரை சொல்லிக்கொண்டு இருக்கும் .
K பாலச்சந்தர் அவர்கள் ,காலமானார் ,அவர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்
MK,
கடவுள் இருக்கிறார் இல்லை அது வேறு விசியம். ஆனால் பெற்றுடுத்த தாய்தந்தையைவிட, கல்வி போதித்த ஆசானைவிட ஆன்மிகம் பேசுவதாக நினைத்து எதாவது உளறி கொட்டும் சிவாஜிராவ், படத்தில் மேக்கப் போட்டு நடிக்கும் ரஜினியை இந்த பிரபஞ்சத்தின் கடவுளாக நினைக்கும் MKயை நினைத்தால் ஒரு வேலை MK முன் ஜென்மத்தில் சுவாமி மகா(M) கிருகனந்தவா (K) இருந்திருப்பாரோ என்று நினைக்கிறேன்.
சுவாமி அருள் பெற்றதால் பாலசந்தர் துறுசாக சிவலோகத்தை அடைவார்.