போடோ இயக்கத்தினர் வெறி்ச்செயல் :43 பேர் படுகொலை

bodoகவுகாத்தி: அசாம் மாநிலத்தின் இரு மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெறிச் செயலில் பொதுமக்கள் 43 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் இதையடுத்த மாநிலம் முழுதுவம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் சம்பவஙகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தேயிலை தோட்டங்களில் பணி புரிந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களே தாக்குதலில் பலியாகியுள்ளனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

மேலும் தாக்குதலில் தப்பியவர்கள் கூறும் போது தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும், வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்து சுட்டு தள்ளியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமை போலீஸ் அதிகாரி காஜென் சர்மா கூறியதாவது: மாநிலத்தின் ஐந்து மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.தனி நாடு கோரி வரும் போடோ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இத்தாக்குதல்களை நிகழ்த்தியிருக்க கூடும் என சந்தேகி்பபதாக தெரிவித்துள்ளார்.

மேலும் போடோ லேண்ட் பகுதிகளில் தங்களின் பலத்தை காட்டும் வகையில் பிற குழுக்களை எச்சரி்க்கும் விதமாகவும், தங்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளும் விதமாகவும் இத்தாக்குலை நடத்தியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்று கிழமை போடோ குழுக்களை சேர்ந்த இரு இளைஞர்கள் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனதெரிவித்துள்ளார்.

சிவப்பு எச்சரி்க்கை : மாநிலத்தில் நி்கழ்ந்துள்ள சம்பவம் பூடான் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கோக்ராஜ்ஹர், பக்ஷா,உதல்குரி மற்றும் சிராங் மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளதால் மாநிலம் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கண்டனம் : தீவிரவாதிகளி்ன் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இச்செயல் கோழைத்தனமானது என தெரிவி்த்துள்ளார். நிலைமை குறித்து மாநில முதல்வரிடம் பேசி வருவதாகவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து நிலவரத்தை அறிந்த வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamalar.com

TAGS: