இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் செவ்வாயன்று தீவிரவாதிகளின் தாக்குதலில் 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு தப்பியோடியுள்ளனர்.
மாநில அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் இவர்கள் அடைக்கலம் கோரியுள்ளனர்.
அந்தப் பகுதிகளில் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போடோ பழங்குடியின மக்களுக்காக தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்திவரும் தீவிரவாதக் குழுவின் மீது இந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். -BBC