காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்

gandhi_gotse_001உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று சமீபத்தில் பா.ஜக எம்.பி,. மகராஜ் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் அமளி எழும்பியதைத் தொடர்ந்து, இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இதற்கென பலரிடம் நிதி வசூலித்து தேவையான தளவாடச் சாமான்கள் வாங்கியுள்ளதாக இந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com/

TAGS: