மிருக வதையை தடுப்பதற்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது பீட்டா. திரிஷா, எமி ஜாக்சன், லாரா தத்தா, சன்னி லியோன், நடிகர் ஜான் ஆப்ரகாம் போன்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
புதிதாக இந்த அமைப்பில் சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். இது பற்றி அவர் கூறும்போது, ‘மிருக வதை தடுக்கும் பணியில் என்னை ஈடுபடுத்தி கொள்வதில் சந்தோஷம். குழந்தைகளிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சர்க்கஸ்களில் உத்தரவுக்கு கீழ்படிந்து நடக்காத விலங்குகளை கொடுமைப்படுத்தி பணிய வைக்கின்றனர். விலங்குகள் நல அமைப்பில் இதுபற்றி எடுத்துக்கூறி சர்க்கஸ்களில் மிருகங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை டஜன் கணக்கில் நான் வளர்க்கவில்லை.
ஆனாலும் மிருகவதை என்பதை சகித்துக்கொள்ள முடியாது. அதை நாம் செய்யக்கூடாது. என்னால் இதில் மாறுதலை கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்‘ என்றார்.
– cinema.dinakaran.com
அவற்றின் சுதந்திரத்தை பறித்து, மிருகக்காட்சிசாலைகளில் அடைத்துவைத்து, நம் சந்தோஷத்திற்காக வேடிக்கை பார்ப்பதும் மிருகவதைதான்.