மோடி, நடிகை ரேகா சிறந்த ‘சைவர்’கள்

modirekhaமும்பை: சைவ உணவு சாப்பிடுபவர்களில் சிறந்த நபர்களாக, பிரதமர் மோடியும், பாலிவுட் நடிகை ரேகாவும், ‘பீட்டா’ அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பீட்டா அமைப்பு:

‘விலங்குகள், மனிதர்கள் கொன்று தின்பதற்காக படைக்கப்பட்டவை அல்ல; சைவ உணவை அனைவரும் சாப்பிட வேண்டும்’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளும், பீட்டா அமைப்பினர், சிறந்த சைவ உணவாளர்கள் யார் என்ற போட்டியை நடத்தியது. அதில், பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஷாகித் கபூர், நடிகைகள், ரேகா, ஹேமமாலினி, கங்கணா ரணாவத் உட்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இறுதி யில், பிரதமர் மோடியும், நடிகை ரேகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து, பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரி பூர்வா ஜோஷிபுரா கூறும் போது, ”சைவ உணவு சாப்பிடுவதுடன், பிறரையும், அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாற வலியுறுத்தும் வகையில் இந்த இருவரின் செயல்பாடு உள்ளது. இவர்கள் சைவம் சாப்பிடுவதுடன், யோகா பயிற்சியும் மேற்கொள்வதால், பிறரை விட ஜொலிக்கின்றனர்,” என்றார்.

மனிதாபிமானம்:

சைவ உணவு சாப்பிடும் ஹாலிவுட் திரையுலக பிரபல நட்சத்திரங்கள், எல்லன் பேஜ், ஜாரெட் லெடோ ஆகியோர் அதிக செக்சி சைவர்களாக, பீட்டா அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பீட்டா என்பது, ‘பீப்பிள் பார் த எதிகல் டிரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்’ என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம்; இதன் பொருள், ‘விலங்குகளை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என்பதற்கான ஆதரவாளர்கள்’ ஆகும்.

-http://www.dinamalar.com

TAGS: