கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வாய்ப்பு: ராஜ்நாத் சிங்

“அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

அனைவரும் தங்கள் மதத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, அதன் கலாசாரத்தைப் பின்பற்றினால், மதமாற்றத்துக்கு அவசியமே ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

19ஆம் ஆண்டின் சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீநாராயண குரு அமைத்த சிவகிரி மடம், கேரள மாநிலம், வர்கலாவில் உள்ளது. இந்த மடத்தில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் மேற்கண்டவாறு கூறினார்.

இதனிடையே, “மதமாற்றத் தடைச் சட்டத்தை ஒருதலைபட்சமாக மத்திய அரசு கொண்டு வராது’ என்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

-http://www.dinamani.com

திருவனந்தபுரம்: கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார். கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ மதம்மாற்றம் என்பது அவசியமற்றது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மதமாற்ற தடைச்சட்டத்தை அரசியல் கட்சிகள் மற்றும் சமூக மத அமைப்பின் கருத்து ஒற்றுமை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பஞ்சாப்பில் 40 கிருஸ்துவர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பு சிக்கியர்களாக மாற்றியுள்ளது. சர்ச்சையாக வெடித்துள்ளது. இதுபோன்று மதமாற்ற முயற்சிகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல் என்று பஞ்சாப் கிருஸ்த்துவர் சபைக்களுக்கான பொருட்பாளர் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.dinakaran.com

TAGS: