இந்தியா பாகிஸ்தான் மோதலுடன் துவங்கிய புத்தாண்டு

pak_military_kashmir
இந்திய பாகிஸ்தான் எல்லை ராணுவம் (ஆவணப்படம்)

 

புத்தாண்டன்று இந்திய ராணுவத்தினர் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பொது எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நான்கு பாகிஸ்தானிய படையினரும் ஒரு இந்திய ராணுவ சிப்பாயும் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தானின் ராணுவத்தினர் நான்குபேர் கொல்லப்பட்டதை இந்திய பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேசமயம், பாகிஸ்தானின் தீவிரமான குண்டுமழையில் இந்திய ராணுவ சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே இந்திய படையினர் தாக்குல் நடத்தியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா பாகிஸ்தனுக்கு இடையிலான எல்லைப்புற மோதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்தபடி இருக்கிறது.

தற்போதைய இந்த மோதல்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியம் மற்றும் இந்திய ஆளுகைக்குட்பட்ட ஜம்மு கஷ்மீர் மாநிலம் ஆகியவற்றின் ஊடாக அமைந்திருக்கும் இருநாட்டு எல்லைப்புற பகுதிகளில் நடந்திருக்கின்றன. -BBC

TAGS: