காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிவருவதாக உளவுத்துறை தகவல்

kashmir02ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிவருவதாக உளவுத்துறை வெளியிட்ட தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதலை ராணுவம் மேற்கொண்டபோதிலும் இந்திய தரப்பில் உரிய பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தாக்கினால் இந்தியா இருமடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்கவேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் 4 பேர் உயிரிழந்தனர். இந்திய தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் வெள்ளைக்கொடி காட்டி இறந்தவர்களின் உடலை அந்நாட்டு ராணுவம் எடுத்துச் சென்றது. இந்நிலையில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் முன்னேறிவருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது. எனினும் எந்த சவாலையும் சமாளிக்க பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-http://www.dinakaran.com

TAGS: