காந்திநகர், ஜன. 8– குஜராத் மாநிலம் காந்திநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–
நான் பிரதமராக பதவியேற்ற பிறகு 50–க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து விட்டேன். அவர்கள் அனைவரும் இந்தியாவுடன் சேர்ந்து முன்னேற விரும்புகிறார்கள். இன்று உலகமே நம்பிக்கையோடு இந்தியாவை எதிர்பார்க்கிறது.
இந்தியாவில் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உலகில் 200 நாடுகளில் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இந்தியாவை தங்களுடன் தொடர்பில் வைத்து கொள்ள வேண்டும். காந்தியின் கொள்கைகள் உங்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாக உள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-http://www.maalaimalar.com


























அப்படியே “விசாவையும்” கவனிங்க…..!!!!