இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கிற அநீதியை எதிர்த்தும், அரசமைப்புச் சட்டத்தில் கண்ட 22 இந்திய மொழிகளையும் இந்திய ஆட்சிமொழிகள் ஆக்கக் கோரியும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் பேசிய இக்கட்சியின் தலைவர் ஆனைமுத்து, “தமிழ்நாட்டின் எல்லைக்குள் மத்திய அரசின் அரசு வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், தொடர்வண்டித்துறை, அஞ்சல்துறை, வருமான வரித்துறை, கப்பல்துறை, வானூர்தித் துறை, பாதுகாப்புத்துறை அலுவலகங்கள் இயங்குகின்றன.
தமிழக்த்தில் உள்ள இத்துறைகளின் வாடிக்கையாளர்களில்-பயனாளிகளில் 100க்கு 95 பேர் தமிழர்கள். ஆனால் அங்கொல்லாம் வெள்ளைக்காரன் காலம் முதல் இன்றுவரை ஆங்கிலம் அன்றாட அலுவல் மொழியாக உள்ளது. இது இந்தியருக்கும், தமிழருக்கும் அவமானம் அல்லவா?
இப்போது இந்தியை மட்டும் அலுவல் மொழியாகத் திணிக்க இந்திய அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. இது இந்தி பேசாத 60 சதவிகிதம் மக்களைக் கொண்ட மற்ற எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் அவமானம். இந்தி பேசாத மக்களுக்கும், தமிழர்க்கும் இந்தி அந்நிய மொழி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்ட 22 மொழிகளையும் எல்லா மத்திய அரசு அலுவலகங்களிலும் அலுவலக மொழிகளாக ஆக்குவது மட்டுமே நாம் விடுதலைப் பெற்றதன் பலனை வெகு மக்கள் அனுபவிக்க அரசு உரிமை தருவதாகும். ஆகவே தமிழ்நாட்டின் எல்லைக்குள் இயங்குகிற எல்லா மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை அலுவல் மொழியாக ஆக்கப்பட வேண்டும் , தமிழ் வழியில் மட்டுமே மத்திய அரசு தமிழர்களை தொடர்புகொள்ள வேண்டும். தமிழில் மட்டுமே தொடர்புகொள்ளும் உரிமை தமிழருக்கு வழங்க வேண்டும். இது தமிழரின் அடிப்படை உரிமை.
தமிழரின் பிறப்புரிமை. என்வே தமிழகப் பெருமக்கள் கட்சி வேறுபாடு, தலைமை வெறுபாடு கருதாமல் ஒன்று திரண்டு தெருவுக்கு வந்து இந்தி மட்டுமே ஆட்சிமொழியாவதை எதிர்த்துப் போராட வேண்டும்” என்றார்.
-http://www.nakkheeran.in
இனியும் அடிமைகளாக வாழ வேண்டுமா? தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
நமக்கு நல்ல தலைவர்கள் இருக்கின்றார்களா? எட்டப்பன்கள் இருக்கும்வரை நமக்கு சாபக்கேடுதான்.