உத்தரகாண்ட் நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தருண் விஜய், இன்று திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் உள்ள தமிழ்தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் நினைவிடத்துக்கு வந்து, அவரது வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த தருண் விஜய், திருக்குறள் வாழ்வியல் தத்துவங்களை விளக்கக் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் ஓடும் ஆட்டோ ரிக்சா, கார் உள்ளிட்ட வாகனங்களில் திருக்குறளை விளக்கத்துடன் எழுதி படிக்க வேண்டும்.
தமிழகத்தில் திருக்குறளை சிறந்த முறையில் படிக்கும் பள்ளி மாணவர்கள் 100 பேரை அழைத்து நாடாளுமன்றத்தில் சிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
-http://www.dinamani.com



























தமிழ் நாட்டுக்காரர்கள் தமிழ்தாத்தாவை எப்போதோ மறந்து விட்டார்கள்! நாங்கள் தமிழர்கள். நாங்கள் அப்படித்தான் இருப்போம்! காரணம் நாங்கள் தமிழர்கள்!