குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

dead_body_004குவைத்தில் கடந்த ஆண்டு 559 இந்தியர்கள் இறந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் என்றும் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குவைத்தில் 2014ம் ஆண்டு 559 இந்தியர்கள் இறந்த விவரம் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டை (2013) ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் அதிகமாகும்.

கடைசி மூன்று மாதங்களில் மட்டும் (அக்டோபர்-டிசம்பர்) 143 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 112 பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.

மீதமுள்ள 31 பேரின உடல்கள், அவர்களின் உறவினர்களின் விருப்பத்தின் பேரில் குவைத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

TAGS: