ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம்: மேனகாகாந்தி

menaga_gandhi_001ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்பதால் பா.ஜ.க எதிர்ப்பதாக மேனகாகாந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசிடம் பேச்சு நடத்தியும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் அலங்காநல்லூர் பாலமேடு பகுதி மக்கள் சோகம் அடைந்தனர்.

இது பற்றி மத்திய மந்திரி மேனகா காந்தி கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டி மேற்கத்திய கலாசாரம் என்பதால் தான் பா.ஜ.க எதிர்க்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருப்பது வரவேற்கதக்க ஒன்றாகும். நமது கலாச்சாரப்படி காளைகளும், பசுக்களும் விவசாயிகளுக்கு மிகவும் பயன் அளிக்க கூடியதாகும்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் போது காளைகள் மட்டுமல்லாது மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள் என்றும் மரங்களையும், செடி, கொடிகளை போற்றி வணங்கும் இந்நாளில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: