நேதாஜி கொல்லப்பட்டாரா?

nethaji

இந்த சுப்ரமணியசாமிக்குப் பின்னால் அப்படி என்னதான் சக்தி இருக்கிறதோ?

கடந்த 10-ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “அரசாங்கம் சொல்வதைப் போல நேதாஜி 1945-ஆம் ஆண்டில் விமான விபத்தில் இறக்கவில்லை. 1953-ஆம் ஆண்டுவாக்கில் ரசியாவின் சைபீரியா பகுதியில் அவர் கொல்லப்பட்டார்’’என சூட்டைக் கிளப்பியுள்ளார் சு.சாமி.

நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி, நேதாஜியே விமானவிபத்தில் தான் இறந்துவிட்டதாகத் தகவலைப் பரப்பிவிட்டு, அப்போது ரசியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இன்றைய சீனத்தின் மஞ்சூரியா பகுதிக்குத் தப்பிச்சென்றார். அன்றைய ரசிய அரசுத்தலைவர் ஸ்டாலின், நேதாஜியை கடுங்குளிர்ப் பிரதேசமான சைபீரியாவில் சிறையில் அடைத்தார். அங்கு 1953 வாக்கில் தூக்கிலிடப்பட்டோ மூச்சுத் திணற வைக்கப்பட்டோ நேதாஜி கொல்லப் பட்டார். சைபீரியாவின் யகுட்ஸ்க் சிறையில் நேதாஜி அடைக்கப்பட்டார் என்பது அப்போதைய பிரதமர்  நேருவுக்குத் தெரியும். இது தொடர்பான கமுக்க ஆவணங்களை மத்திய அரசு வெளியிடவேண்டும். நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஏனென்றால் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் வெற்றிபெற்றபோதும், இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, நேதாஜி யின் வீரதீரமான போராட்டச் செயல் பாடுதான்’’ என சு.சாமி சொல்லியிருப் பது, நேதாஜியின் குடும்பத்தினர், வரலாற்றியலாளர்கள், நேதாஜியின் அபிமானிகளிடம் மீண்டும் பதற்றம் கலந்த ஆர்வத்தைக் கிளறிவிட்டி ருக்கிறது.

பல தரப்பினரும் நேதாஜியின் மரணம் பற்றிய ஆவணங்களை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகெந்து சேகர் ராய், கடந்த நவம்பரில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் அரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, நேதாஜி தொடர் பாக மத்திய அரசிடம் மொத்தம் 87 ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை ரகசியமான கோப்புகளாகப் பாதுகாப்ப தாகவும் தெரிவித்தார். இவற்றில் 60 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திலும் 29 ஆவணங்கள் வெளியுறவு அமைச்ச கத்திடமும் இருக்கின்றன. பிரதமர் அலுவலகத்திலிருந்த கோப்புகளில் இரண்டை மட்டும் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த விவரங்களைத் தெரிவித்தபோதும், இவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளுமாறு வெளியிடமுடியாது என மோடி அரசு கூறியுள்ளதுதான், சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் அடுத்தடுத்து இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, திரிணாமுல் எம்.பி. சுகெந்து சேகர் ராய், கடிதம் அனுப்பியிருந்தார். அது பற்றிப் பரிசீலனை செய்வதாக ராஜ்நாத்சிங் பதில் அனுப்பினார். எனினும் பிற நாடுகளுடனான உறவு பாதிக்கும் என அரசு தயங்குகிறது.

“அப்படி பங்கம் வந்தாலும் பரவா யில்லை, நாட்டு மக்களுக்கு நேதாஜியின் இறுதிக்காலம் பற்றி இருக்கும் ஆவ ணங்களை வெளியிடவேண்டும்’ என்கி றார் சு.சாமி. நேதாஜி உருவாக்கிய பார் வர்ட் ப்ளாக் கட்சியின் பொதுச்செய லாளர் தேவபிரசாத் பிஸ்வாஸ். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்கூட இதில் அதிக ஆர்வம் காட்டுவது, கவனிக்கத் தக்கது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேசுகுமாரை, நேதாஜி யின் கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ் மற்றும் சித்ரா கோஷ், பேராசிரியர் டி.என்.போஸ் ஆகியோர் உள்பட நேதாஜி யின் குடும்பத்தினர், கடந்த மாதம் 27ஆம் தேதியன்று கொல்கத்தாவில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர்.

-http://www.nakkheeran.in

TAGS: