ஒவ்வொரு மீன்பிடி படகையும் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்: மனோகர் பாரிக்கர்

parikarபனாஜி:”இந்திய ஆட்சி அதிகார வரம்புக்கு உள்பட்ட கடல் பரப்பில் இயக்கப்படுகின்ற ஒவ்வொரு மீன்பிடிப் படகையும் கண்காணிக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது எனபாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.கோவா மாநிலம் பனாஜியில்,இதற்காக ஐ.சி.ஜி. என்ற 4 கப்பல்கள் பாதுகாப்பு ஆய்வுக்காக பயன்படுத்த துவக்கி வைக்கப்பட்டது.

கோவா மாநிலம், பனாஜியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பாரிக்கர் பேசுகையில்,ஒவ்வொரு மீன்பிடிப் படகிலும், ஒரு மின்னணு சாதனம் பொருத்தப்படும். அந்த மின்னணு சாதனம், இந்திய விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளுக்கு சமிக்ஞை அனுப்பிவிடும்.இதனால், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் என அழைக்கப்படும் கடல் எல்லைக்குள் எந்தவொரு படகு நுழைந்தாலும் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

இதன் மூலம் 2 லட்சம் மீன்பிடிப் படகுகளையும், மற்ற படகுகளையும் கண்காணிக்க முடியும்.சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் படகுகள் சென்றால், கடலோரக் காவல்படைக்கு சமிக்ஞை கிடைத்துவிடும். மேலும், இந்தியக் கடல் எல்லைக்கு வெளியேயும் சந்தேகத்துக்கிடமான வகையில் இயக்கப்படும் படகுகளையும் கண்காணிக்க முடியும்.

இதற்காக, கடலோரப் பகுதிகளில் ராடார் கருவிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 46 ராடார் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, 38 ராடார் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று மனோகர் பாரிக்கர் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: