பீகாரில் நடந்த மதக்கலவரத்தில் சிக்கிக்கொண்ட 10 முஸ்லிம்களை விதவைப் பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
பீகாரின் அசிப்பூர் என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தில் கடந்த 18ம் திகதி நுழைந்த கும்பல் ஒன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.
கலவரத்தில் சிக்கிக் கொண்ட 10 முஸ்லிம்களை, 50 வயதான சயீல் தேவி என்ற பெண் தனது இரண்டு மகள்களின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்து சயீல் தேவி, தமது வீட்டிற்குள் நுழைந்து தேட முயன்ற கலவரக்காரர்களை தடுத்து, இங்கு யாரும் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது நல்ல எண்ணத்தையும், தைரியத்தையும் பாராட்டி பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி ரூ.51,000 பரிசுத் தொகையை வழங்கியுள்ளார்.
இந்து சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி கொலை செய்யப்பட்டதால் கோபமடைந்த கிராம வாசிகள் அசிப்பூர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
-http://www.newindianews.com

























