அரசியல் தலைவர்களை அதிகமாக நம்பும் இந்தியா!

india_politics_001சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு, உலக நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும், மூன்றாம் இடத்தில் இந்தோனேசியா, நான்காம் இடத்தில் சீனா, ஐந்தாம் இடத்தில் சிங்கப்பூர் மற்றும் ஆறாம் இடத்தில் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் நம்பத்தன்மை குறைந்த நாடுகளாக தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, இத்தாலி உட்பட 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பிரேசில்,மலேசியா, அமெரிக்கா உட்பட 8 நாடுகள் நடுநிலை நாடுகளாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் தலைவர்களின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை 82 சதவிகிதமாக உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 5-வது இடத்தில் இருந்து தற்போது 2-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: