இந்தியாவில் பெண் சிசுக்கொலைகள் மற்றும் பெண் கருக்கொலைகள் உள்ளிட்ட பெண்பிள்ளைகளுக்கு எதிரான பரவலான பாரபட்ச நடவடிக்கைகளை தடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார்.
இவ்வாறான பாகுபாடான நடவடிக்கைகள் காரணமாக, ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கும் 918 பெண்குழந்தைகளே பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
2011-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம், கடந்த 30 ஆண்டுகாலத்தில் 120 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. -BBC



























வறுமை இருக்கும் வரை பெண் சிசுக்களைக் கொல்ல புதிய புதிய வழிகளைக் கொண்டு வருவார்கள் பாதிக்கப்படுபவர்கள். வறுமையை ஒழித்தலே இதற்கான தீர்வு!