புதுடில்லி: குடியரசு தினத்திற்கு இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை ஒரு எச்சரிக்கை அனுப்பியுள்ளது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவில் வசிப்பவர்கள் மூலம் இந்த சதிச்செயலை நடத்த திட்டம் புனையப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குடியரசு தின விழாவில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா வரவுள்ளார். இவரது வருகையை முன்னிட்டு டில்லி நகர் முழுவதும் முழு அலர்ட்டாக வைக்கப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முகம்மது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கைகோர்த்து செயல்பட முடிவு செய்துள்ளனராம். இந்திய- பாக்.., எல்லையில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய உளவு பிரிவினர் டில்லி மற்றும் ஆக்ரா போலீசாருக்கு எச்சரிக்கை நோட் அனுப்பியுள்ளனர்.
இதில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் இலங்கை வாழ் நபர்கள் , மாலத்தீவு நபர்கள் ஆகியோருடன் கூட்டு அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டுள்ளனர்.
இதனையடுத்து டில்லியில் நீண்ட நாள் தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரமுகர்களை போலீசார் தீவிரமாகவும், ரகசியமாகவும் கண்காணித்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.
-http://www.dinamalar.com


























என் கணித ஜோசியர் மதையா சொல்றாரு. ஒபாமா 26-ந் தேதி இந்தியாவின் குடியரசு தினத்திற்கு போவது அவரின் உயிருக்கே ஆபத்து வருமாம்!. வந்தா பார்ப்போம் என்று ஒபாமா சொல்கின்றார். ‘Motorcade’ – ல் போகும்போது பார்த்துப் போப்பா!. கென்னடியைப் போட்டுத் தள்ளிய மாதிரி தங்களையும் போட்டுத் தள்ளிடப் போகின்றார்கள் இந்து நாட்டுத் தீவீரவாதிகள்.