சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் தெரிவித்தார்.
தொற்றா நோய்களுக்கானத் தடுப்பு முறைகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக் கட்டளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிலிப் ஏ.மின் பேசியது:இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது. எய்ட்ஸ் போன்ற தொற்றும் நோய்களைக் காட்டிலும் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களால்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
2025-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 35 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து சர்க்கரை நோய் சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
-http://www.dinamani.com
எதற்கு எடுத்தாலும் இனிப்பு வழங்கியும் உண்டும் வந்தால் இந்நிலைதானே உருவாகும். இந்திய உணவு வகைகில் இனிப்பு வகைகளே அதிகம். அங்கு பலர், குறிப்பாக இயற்க்கை மருத்துவர்கள் இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று உறுதியாக சொல்கிறார்களே. இப்படியிருக்க ஏன் அந்நோய் இவ்வளவு பேரை பாதிக்கின்றது? ஊருக்குத்தான் உபதேசமோ? அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதனிலிருந்து விமோசனம் பெற கண்டிப்பாக விரும்புவார்கள்தானே. அவர்களுடைய மருத்துவம் அங்கே வெகுவாக தேவைப்படும். அந்த மருத்துவம் வியாபாரமானாலும் அங்கே அதிகமான லாபமும் அடையாலாமே. அப்படி பிரபலமாகும் மருத்துவம் மற்றவர்களாலும் விரும்பபடுமே. அதைவிடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்துவது ஏன்? அந்த மருத்துவம் எதிர்பார்த்த பலனை தராமல் போனால், வெளிநாட்டவர்கள் அம்மருத்துவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பதாலா? நீதி வழங்கவேண்டிய நீதிபதிகளை கூட இப்பொழுது நம்ப முடியவில்லை. மற்றவர்கள் எம்மாத்திரம்? நாம் நமது தேவைக்கு ஏற்ப அளவோடு உண்டு வளமுடன் வாழ்வோம். நாவிற்கு ருசி என்பதால் கண்டதையும் உண்டு, குடித்து உடலினை பாழ்படுதிவிடாதீர்கள். பிறகு எப்படிப்பட்ட ருசியாக இருந்தாலும் புசிக்க முடியாத நிலைதான். அதோடு ருசியற்ற விரும்பாத மருந்துகளும், மாத்திறைகளுமே உணவாகிவிடும். இறைவன் நமது உடலையும் அதனின் அங்கங்களையும் எவ்வளவு முறையாக நமக்காக கொடுத்துள்ளார். இறைவன் குறையற அளித்த உடலினை நமது போசன பிரியத்தால் பாழ்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
இது மட்டுமா கற்பழிப்பில் உலக நம்பர் 1……AIDs நோயில் உலக நம்பர் 1 ..சீனாவை விட இந்தியாவில் AIDs நோயாளர்கள் 10 மடங்கு அதிகம்
தென் இந்திய உணவில் தான் அதிகமாக இனிப்பு சேர்க்கபடுகிறது என்று ஆங்கில பத்திரிக்கையில் படித்தேன் அதிலும் சுவை என்று எதையும் குறிபிட்டு சொல்லும் அளவுக்கு இருக்காது , தேனீர் குட பாயசம் போல அதிக இனிப்பாக இருக்கும் என்று சென்னை சென்ற என் மலாய் தோழி சொல்ல கேட்டிருகின்றேன் . லஸ்ஸி குட வட இந்தியாவை தென் இந்தியாவில் தான் அதிக இனிப்பு .
இனிப்பு மட்டும் அல்ல
அரிசி சோறு இனிப்புநீருக்கு பிற்காலத்தில் வழி வகுக்கும்.