அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள்: சீனாவை நம்பியிருக்கும் இந்தியா; நிலையை மாற்ற முயற்சி

medicineபெங்களூரு: கடந்த நான்கு நிதியாண்டுகளாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் 38 ஆயிரத்து 186 கோடி என கணக்கிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது: பிரதமர் மோடி அறிவித்துள்ள மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலிடம் கொடுக்க வேண்டிய இடத்தில் மருந்து மாத்திரைகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாட்டு மக்களின் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரையில் சீனாவில் இறக்குமதி செய்யப்படுவதே இதற்கு காரணமாகும். கடந்த வருடம் அரசு சீனாவை அதிகம் நம்பியுள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவசிய மருந்து பொருட்களி்ல் சில குறிப்பிட்ட மருந்துகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் காய்ச்சலைகுணப்படுத்தக்கூடிய பாராசி்ட்டமால், அமாக்சலின், சிப்ரோபிளாக்ஸாசின், அஸ்கார்பிக் அமிலம், இப்யூபுரூபன் உட்பட 12 பொருட்கள் உள்ளன. இவற்றில் 8 மருந்து பொருட்கள் உலக சுகாதார அமைப்பின் மாதிரி பட்டியலில் உள்ளவையாகும்.

இவற்றில் 80 முதல் 90 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இது பொருளாதார கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அதிகாரி ஒருவர் கூறினார்.

சீனாவிலிருந்து மருந்து மாத்திரை இறக்குமதி செய்யப்படுவது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2011-12-ம் ஆண்டில் சுமார் 8 ஆயிரத்து 798 கோடி ரூபாய், 2012-13-ல் 11 ஆயிரம் .கோடி ரூபாய், 2013-14-ல் 11 ஆயிரத்து 865 கோடி ரூபாய் எனவும் நடப்பு ஆண்டிற்கான கால கட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 521 கோடி ரூபாய் அளவிற்கு மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்மாசூட்டிக்கல் துறையின் இணை செயலாளர் கூறுகையில், மருந்துவிலைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்போது சீனா விலையை ஏற்றி விடுகிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆராய மருத்துவ ஆராய்ச்சி துறை செயலாளர் டாக்டர் விஎம் காடோச் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. என கூறினார்.

அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆலோனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடோச் குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்ய உள்ளது. ஆனால் இந்த கொள்கை அமலுக்கு வரும் முன் இறக்குமதியை குறைப்பதற்கான வழி முறைகளை ஆராய வேண்டும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

இறக்குமதி செய்யப்பபடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்படுத்தக்கூடிய பாராசிட்டமால் மருந்துகளின் தரம் குறித்தும் எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் டில்லியில் இது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் குறைந்த செலவில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் தயாரி்ப்பது குறித்த ஆய்வு முக்கியம் என வலியுறுத்தப்பட்டது.

-http://www.dinamalar.com

TAGS: