பர்சுக்குள் பணம் வைத்து போட்டால் மும்பை மக்கள் அதை எடுக்கமாட்டார்கள்: அவ்வளவு நேர்மை

money_survey_001உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் பணம் தொடர்பான நேர்மை எப்படி உள்ளது என்பது குறித்து பத்திரிகையொன்று ஆய்வு நடத்தியது.

அதில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைவிட, மும்பை மக்கள் நேர்மை குணம் உள்ளவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் உலகிலுள்ள 16 முக்கிய நகரங்களிலுள்ள மக்களின் நேர்மையை சோதித்து பார்க்க திட்டமிட்டது.

இதற்காக 50 அமெரிக்க டொலருக்கு சமமான உள்ளூர் பணத்தை பர்சுகளில் வைத்து தெருவில் போட்டனர். ஒவ்வொரு நகரத்திலும் தலா 12 பர்சுகள் என 16 நகரங்களில் மொத்தம் 192 பர்சுகளை பணத்துடன் போட்டுள்ளனர்.

அந்த பர்சில் பர்ஸ் உரிமையாளர் பெயர், போன் நம்பர், குடும்ப புகைப்படம், விசிட்டிங் கார்டு ஆகியவையும் வைத்து போடப்பட்டது.

உலக அளவில் ஃபின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சின்கி நகர மக்கள் இந்த தேர்தலில் முதல் மாணவர்களாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அங்கு 12 பர்சில், 11 பர்ஸ்கள் உரியவர்களிடமே திரும்ப வந்துள்ளன.

இதற்கு அடுத்தபடியாக மும்பையில்தான் 9 பர்சுகள் திரும்ப வந்துள்ளன. வறுமையின் பிடியில் சிக்கிய நாடு, லஞ்சம் பெருக்கெடுத்த நாடு என்ற தோற்றம் கொண்ட இந்தியாவின் ஒரு நகரத்தில் 12 பர்சுகளில் 9 திரும்பி வந்துள்ளதை வைத்து பார்க்கும்போது இந்தியர்கள் நேர்மை மிகவும் பெரிது என்று ஆங்கில ஊடகம் வர்ணித்துள்ளது.

இதில் மோசமான இடம் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பான் நகருக்கு கிடைத்துள்ளது.

-http://www.newindianews.com

TAGS: