டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் 50% மின்கட்டணம் குறைப்பு, 24 மணிநேர தடையில்லா மின்சாரம்; பெண்கள் பாதுகாப்புக்காக 10 லட்சம் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் ஜேஜ்ரிவால் வெளியிட்டார். 50% மின் கட்டணம் குறைப்பு; பெண் பாதுகாப்புக்கு 10 லட்சம் சிசிடிவி காமிரா- ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை!
முன்னதாக செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: நாங்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். டெல்லி வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை 4 மாதங்களாக கஷ்டப்பட்டு சிந்தித்து இந்த தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளேன்.
இதில் இளைஞர்கள், மகளிர் மற்றும் கிராமபுறத்தினர் கல்வி, நகர முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எங்களின் தேர்தல் அறிக்கை கீதை போல, பைப்பிள் போல, குரான் போல புனிதமானது.
பா.ஜ.க ஏன் இன்னும் தேர்தல் அறிக்கை வெளியிவில்லை. அந்த கட்சி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அக் கட்சி அச்சத்தில் இருக்கிறது. நாங்கள் டெல்லி நகர வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம் இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:
– பெண்களின் பாதுகாப்புக்காக 10-15 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்படும்.
– அரசு ஊழியர்களுக்கு வீடு வழங்கப்படும்.
– 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்.
– 50 சதவீதம் மின்சார கட்டணம் குறையும்.
– மாணவர்களுக்கு உயர் கல்விக்கு கடன் வசதி.
– வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு நீதிமன்றம்.
– நுகர்வோர் பாதுகாப்புக்கான சட்டம்.
– ஜன்லோக்பால் நிறைவேற்றுவோம்.
– நகர பஸ்களில் போலீஸ் பாதுகாப்பு.
– குடி நீர் பைப்லைன் டெல்லி முழுவதும் அமைக்கப்படும்.
– அனைத்து வீடுகளுக்கும் 2 மணி நேரத்திற்கொரு முறை தண்ணீர் விநியோகம்.
– புதிதாக 20 கல்லூரிகள் திறக்கப்படும்.
– ஓய்வு பெற்றவர்களுக்கு வீடு.
– மருத்துவமனைகள் மேம்பாட்டுக்கு திட்டம்.
– 5 ஆண்டுகளில் யமுனை முழுமையாக தூய்மைபடுத்தப்படும்.
– மானிய விலையில் சோலார் பேனல்.
– கிராமங்கள் நகர்ப்புறத்தோடு இணைக்க திட்டம்.
-வீட்டுக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசம்.
– புதிதாக 500 பள்ளிகள் திறக்கப்படும்.
– உலக அளவில் புகழ் பெற்ற நகரமாக டெல்லியை மாற்றுவோம்.
– 2 லட்சம் டாய்லெட்டுகள் அமைப்போம்.
– 900 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
– நில கையகப்படுத்துதல் கட்டாயப்படுத்த மாட்டோம்.
– 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் இலவச கல்வி
–tamil.oneindia.com