காங்கிரஸ் ஆட்சியில் எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் வெள்ளைக்கொடி காட்டியதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் டக்ளாகாபாத் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், அண்மையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதையடுத்து, தாக்குதலை தீவிரப்படுத்துமாறு எல்லை பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது, அந்த அதிகாரி 16 முறை வெள்ளைக் கொடி காட்டப்பட்டும் பாகிஸ்தான் படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை என்றும், இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவித்தது எனக்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்துமாறு எல்லை பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் பாகிஸ்தான் படைகள் தோல்வி முகம் கண்டு திரும்பிச் சென்றன.
முதல் அமைச்சராக இருந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால், எவ்வாறு நல்ல ஆட்சியை அமைக்க முடியும் என்றார்.
-http://www.nakkheeran.in