இந்திய – சீன எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: சுஷ்மா சுவராஜ் நம்பிக்கை

inchiபீஜிங்:”சீனா உடனான எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண, இந்தியாஆர்வமாக உள்ளது,” என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள அவர், இந்திய – சீன ஊடக கூட்டமைப்பின் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியா – சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த, ஆறு அம்ச திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இரு நாடுகளும், பரவலான பரஸ்பர ஒத்துழைப்பு, உள்நாடு, பிராந்திய மற்றும் சர்வதேச நலன், புதிய துறைகளில் ஒத்துழைப்பு, நிலையான நீடித்த தொடர்பு, செயல்பாடு அடிப்படையிலான அணுகுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் இரு நாடுகளின், ‘ஆசிய நுாற்றாண்டு’ கனவு, நனவாகும்.மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த இந்த எட்டு மாதங்களில், இந்தியாவில் நவீனமயமாக்கலை நோக்கி, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.மோடி, சீன அதிகர் ஜி ஜிங் பிங்கை, மூன்று முறை சந்தித்துள்ளார். இதனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நினைத்து கூட பார்த்திராத துறைகளில், இரு நாடுகளின் நல்லுறவு உயர்வான நிலையை அடைந்துள்ளது.

இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சமாதானமும், அமைதியும் ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, சீன அதிபர் ஜி ஜிங் பிங், இந்தியா வந்தார். அப்போது அவர், சீனாவிற்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதையேற்று, பிரதமர் மோடி, வரும் மே மாதம் சீனா வருகிறார்.அதற்கான தேதிகளை, சீன அரசுக்கு அளித்துள்ளேன்.கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு மேலும் ஒரு பாதை திறக்கப்பட உள்ளது. இப்பாதையில், பக்தர்கள் பேருந்து மூலம் வசதியாக பயணம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடையே உரையாற்றிய சுஷ்மா, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு, ‘தூய்மையான இந்தியா’, ‘சுத்தமான கங்கை’, ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு’ உள்ளிட்ட திட்டங்களில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

* கைலாஷ் மானசரோவருக்கு நேரடி பஸ் பயணத்திற்கான புதிய வழித்தடம் துவங்கப்படும்* அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய, 2,000 கி.மீ., எல்லைப் பகுதிதான் பிரச்னை என்கிறது சீனா* ஆனால், எல்லையின் மேற்கே, 4,000 கி.மீ., பரப்பு வரை, பிரச்னைக்குரிய பகுதி என்கிறது இந்தியா.

-http://www.dinamalar.com

TAGS: