இந்திய பிரதமர் மோடி தலைமையில் பா.க.ஜ ஆட்சி ஏற்பட்டு ஏழு மாதங்களாகியுள்ள நிலையில், இதுவரை பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
தொழில் நிறுவன கூட்டமைப்பு அசோசெம் கடந்த டிசம்பர் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 54.2 சதவீதம் நிறுவனங்கள், மோடி ஆட்சி ஏற்பட்ட இந்த ஏழு மாதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்படி இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்களில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்பட்டு தொழில்துறைக்கு பலன் கிடைக்கும்’ என்று 62.5 சதவீதம் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு திட்டங்களில் அடுத்த இரண்டு மாதங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று 45.8 சதவீதம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்றுமதி சதவீதம் பெரிய அளவில் உயரவில்லை, பட்ஜெட்டுக்கு பின்னர் மாற்றம் தெரியலாம் என்றும், அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பன்னாட்டு, தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புண்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த சில மாதங்களில் சந்தை விற்பனை, நிறுவன லாபம் அதிகரிக்கும் என்று 58.3 சதவீதம் நிறுவனங்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.newindianews.com