இந்தியாவின் மத சகிப்புத் தன்மை : ஒபாமாவின் கருத்தில் மாற்றம் ஏன்?

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வந்திருந்த போது, இந்தியாவில் மத சுதந்திரம் இருக்கிறது என்று கூறியிருந்த கருத்துக்கு நேர் மாறாக நேற்று பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, வாஷிங்டனில் நேற்று பேசிய ஒபாமா, இந்தியாவில் தற்போதைய மத சகிப்புத் தன்மையைப் பார்க்கும் போது மகாத்மா காந்தி நிச்சயம் அதிர்ச்சி அடைவார் என்று கூறியிருந்தார்.

இதே ஒபாமா, கடந்த வாரம் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த போது, குடியரசு தின விழாவில் உரையாற்றினார்.

அதில், நம்பத்தகுந்த, அழகான நாடு இந்தியா. இங்குள்ள அனைவரும் தங்களது மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை மேம்படுத்தவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரம் அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு வந்த போது மத சுதந்திரம் பற்றி வேறு விதமாக பேசிய ஒபாமா, அமெரிக்கா சென்றதும் அதனை மாற்றிப் பேசியிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

-http://www.dinamani.com

TAGS: