டெல்லியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?: நாளை வாக்கு எண்ணிக்கை

aravindடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று முடிவுற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நாளை காலை 8 மணியளவில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

70 தொகுதிகளில் இரண்டிற்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?: நாளை வாக்கு எண்ணிக்கை- தட்ஸ்தமிழில் லைவ்! டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் முன்னர் இல்லாத அளவுக்கு 67.14 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள், அவற்றை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற அனைத்து மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை 14 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. பாஜகவிற்கு இரண்டாம் இடமும், காங்கிரசுக்கு 3ஆம் இடமும் கிடைக்கும் என பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

tamil.oneindia.com

TAGS: