தில்லி: முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலனை: கேஜரிவாலிடம் பிரதமர் மோடி உறுதி

  • தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

    தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது பட்பர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா உடனிருந்தார். தேநீர் விருந்துடன் சுமார் 15 நிமிடங்கள் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறியதாவது:

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமரிடம் கேஜரிவால் பேசினார். அதுகுறித்துப் பரிசீலித்து முடிவெடுப்பதாக பிரதமர் கூறினார்.

மோடி பங்கேற்கவில்லை: வரும் சனிக்கிழமை ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமருக்கு கேஜரிவால் அழைப்பு விடுத்தார். ஆனால், ஏற்கெனவே சில அலுவல்களில் பங்கேற்க ஒப்புக் கொண்டு விட்டதால் தன்னால் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத நிலையை பிரதமர் விளக்கினார்.

மத்தியில் பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருப்பதைப் போல, தில்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைக்கவிருப்பதால் இரு அரசுகளும் ஒருங்கிணைந்து தில்லியின் வளர்ச்சிக்காகச் செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை கேஜரிவால் பிரதமரிடம் வெளிப்படுத்தினார்’ என்றார் மணீஷ் சிசோடியா.

-http://www.dinamani.com

TAGS: