எளிமையை பற்றி பேசிய மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடை அணிந்ததால் பாஜக தோற்றது: நல்லக்கண்ணு

nallakannu12இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாடு செஞ்சியில் நடந்தது. மாநாட்டின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

மத்தியில் ஆளும் அரசு முதலாளிகளுக்கு உதவும் ஆட்சி. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சாதி, மத கலவரங்களை தூண்டிவிடுகிறது. ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை முறையாக தரவில்லை. கியாஸ் மானியத்தை ரத்து செய்துவிட்டது.

பாரதிய ஜனதா அரசு பல்லாயிரக்கணக்கான ஏழை–எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்திவிட்டது. இதன் மூலம் 40 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியதாக கூறும் மத்திய அரசு, 2 முதலாளிகளுக்கு ரூ. 1 லட்சம் கோடியை சலுகையாக வழங்கி உள்ளது.

மகாத்மா காந்தி கோட்டு–சூட்டு அணிந்து மதுரை வந்தபோது விவசாயிகள் வேட்டி, துண்டு அணிந்திருந்தததை பார்த்துவிட்டு அவரும் வேட்டி–துண்டு அணிய ஆரம்பித்தார். ஆனால் டீக்கடை தொழிலாளி என சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டெல்லி வந்தபோது ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் பெயர் பொறித்தகோட்டு சூட்டு அணிந்திருந்தார். இவர்கள் தான் எளிமையை பற்றி பேசுகின்றனர். இதனால்தான் மோடிக்கு தோல்வியை தர டெல்லி மக்கள் முடிவெடுத்து பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தேர்தலில் நல்ல பாடம் தந்துள்ளனர். இவ்வாறு நல்லக்கண்ணு பேசினார்.

-http://www.nakkheeran.in
TAGS: