பிப்.18-இல் மதுக் கடைகளை மூடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

  • நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்குரைஞர் பாலு உள்ளிட்டோர்.

    நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்குரைஞர் பாலு உள்ளிட்டோர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்றாவிட்டால் பிப்ரவரி 18-ஆம் தேதி மதுக் கடைகளை மூடும் போராட்டம் நடைபெறும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக் கோரி, பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, கணேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியது:

மதுவை ஒழிப்பதற்காக கடந்த 35 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதற்கான ஆணையாக இருக்கும்.

தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுக் கடைகளை அகற்றாவிட்டால் பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் சுமார் 2 ஆயிரம் மதுக் கடைகள் உள்ன. அதில் 89 கடைகள் தருமபுரி தொகுதிக்குள் உள்ளன. சட்டம் – ஒழுங்கு சீர்குலைவதற்கும், சாலை விபத்துகளுக்கும் மதுவே மூல காரணமாக உள்ளது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மதுக் கடைகளை மூட வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

-http://www.dinamani.com

TAGS: