சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை : ஜாவடேகர்

ttரத்னகிரி:சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், விதிகளிலும், நெறிமுறைகளிலும் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரியில் “தூய்மை இந்தியா’ இயக்கத்தை நேற்று துவக்கி வைத்து அவர் பேசும்போது,சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்த வேண்டிய கொள்கைகள் குறித்து, 64 அரசு அதிகாரிகள் ஆலோசனைகளை அளித்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்காக விதிகளிலும், நெறிமுறைகளிலும் திருத்தங்களைச் செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

நாட்டில், சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக 17 இடங்களைக் கண்டறிந்துள்ளோம். இதில், முதல்கட்டமாக சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் கருவியை பொருத்துவதற்காக 3,000 தொழிற்சாலைகளை தேர்வு செய்துள்ளோம். இதே கருவிகள், அனைத்து தொழிற்சாலைகளிலும் பொருத்தப்படும்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

செயற்கைக்கோள் படங்களின் மூலம், ஆறுகளில் மணல் திருட்டு நடைபெற்ற இடங்கள் கண்டறியப்படவுள்ளன. ஆறுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை அரசு அனுமதிக்காது.
40 மைக்ரான், மற்றும் அதற்கும் குறைவான அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக பறிமுதல் செய்யும்படி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சுத்தமான காற்று, சுத்தமான நீர், மின்சாரம், பசுமை நிறைந்த பகுதிகள் ஆகிய 4 முக்கிய இலக்குகளைக் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பணியாற்றி வருகிறது.இந்த இலக்குகளை அடைவதற்கு மத்திய அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

-http://www.dinamalar.com

TAGS: