ராணுவத் தளவாடங்களை நாமே உற்பத்தி செய்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: பிரதமர் உரை

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று நடக்கும் 10வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி நடக்கும் ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் சுமார் 64 விமான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 300 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. கண்காட்சியை துவங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய நவீன தொழில் நுட்பத்தின் தேவை அதிகம் உள்ளது. ராணுவத்தில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ராணுவ தேவைக்கான ஆயுதங்களை தற்போது 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து பெறுகிறோம். நம் தேவைக்கான ராணுவத் தளவாடங்களை  நாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். என்று கூறினார். பிப்ரவரி 22ம் தேதிவரை இந்த கண்காட்சி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: