கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்தியாவில் முதன் முறையாக மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் படத்தை இயக்கியவர் இவர் தான்.
சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இப்படம் சிறந்த 10 தமிழ் படங்களில் ஒன்றாக வந்துள்ளது. இதில் இவர் பேசுகையில் ‘இப்படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
மேலும், படத்தின் காட்சியமைப்பு எந்த விதத்திலும் அவதார், டின் டின் படத்திற்கு நிகரானவை இல்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால், கொஞ்சம் டைம் கொடுங்க, அதே அளவு நல்ல மோஷன் கேப்சர் படத்தை தருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
தங்கச்சி ,தயவு செய்து வேண்டாம் ,அப்பா சூப்பர் ஸ்டாரா இருப்பது உங்களுக்கு விருப்பம் இல்லையா ? உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க ,சினிமாவில் புகுந்து குட்டைய கிளப்ப வேண்டாம் ,தமிழர்களால் அவதார் கொடுக்க முடியாது பணமும் போதாது .பேசாமல் ஏதாவது கதை புத்தகத்தை படித்து சிறு பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி சந்தோஷ படுத்துங்கள்,,தங்கச்சி