காற்று மாசு மனிதர்களின் வாழ்நாளை 3 ஆண்டுகள் குறைக்கலாம்

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு தரத்துக்கு காற்று மாசு குறைந்தால் இந்தியாவில் வாழும் பாதி அல்லது 660 மில்லியன் மக்கள் தங்களது வாழ்நாளில் 3.2 ஆண்டுகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சிகாகோவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் உலகம் முழுவதிலும் நிலவும் காற்று மாசு குறித்து சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செயற்கைக் கோள்கள் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் மிக முக்கிய நோக்கம் தற்போது வளர்ச்சியாகவே உள்ளது. ஆனால், அந்நாடு பல ஆண்டுகளாக தங்களது வளர்ச்சிப் பாதையில் மக்களின் உடல் நலம் மற்றும் காற்று மாசு குறித்து அலட்சியம் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், வளர்ச்சியால் ஏற்படும் காற்று மாசு காரணமாக மனிதர்களின் ஆயுட் காலம் வெகுவாகக் குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: