டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றும் அந்நாடு வரைபடம் வெளியிட்டது. பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு மேலும் “இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தாயார், ஆனால் அருணாசல பிரதேசத்தில் முதலீடு செய்யப்பட மாட்டாது, ஆனால் ஜப்பான் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே பார்க்கிறது” என்று ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் கிஷிடா கூறியிருந்தார்.
இக்கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்து, ஜப்பானை கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்துக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு டெல்லிக்கான ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த பில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக கண்டிராத வளர்ச்சியை அருணாச்சல பிரதேசம் மாநிலம் அடுத்த 5 ஆண்டுகளில் காணும் என்றார். பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீனா, இது இருதரப்பு உறவுக்கு உகந்தது அல்ல என்றும் கூறியுள்ளது. மேலும் “அருணாச்சல பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகாரம் செய்யாது” என்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


























தலாய் லாமா பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல் இதற்கும் தெரிவித்தால் அப்புறம் இந்தியாவின் சுயாட்சி என்பது சீனாவின் கையிலா?. மண்டை கணம் தலைக்கு ஏறி சீன இப்படியே போய் கொண்டிருந்தால் உலகில் பல நட்பு நாடுகளை படிப்படியாக இழக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வது நல்லது.