கிறிஸ்தவ மதத்தை பரப்புவதே தனது நோக்கம் என்பது அன்னை தெரசாவே ஒப்புக் கொண்ட உண்மை என பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மீனாட்சி லேகி கூறினார்.
அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே முக்கியமானதாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்த நிலையில், பாஜக எம்.பி. மீனாட்சி லேகியும் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அன்னை தெரசா குறித்து கூறப்பட்ட கருத்துகளை காங்கிரஸ் கட்சியினரும், வேறு சில தலைவர்களும் அரசியலாக்குகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் அன்னை தெரசா குறித்து தாங்கள் கொண்டுள்ள பார்வையை பொதுமக்கள் மீது திணிக்கக் கூடாது.
தான் மதமாற்றம் செய்யவே வந்ததாக அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அன்னை தெரசா பேட்டி ஒன்றில் கூறுகையில், “அனைவரும் என்னை சமூக சேவகர் எனக் கருதுகின்றனர். நான் சமூக சேவகர் கிடையாது. நான் கர்த்தருக்கு சேவை செய்து வருகிறேன். மக்களை கிறிஸ்தவ மதத்திற்குள் கொண்டு வருவதே எனது பணியாகும்’ என்றார்.
எனவே, அன்னை தெரசா குறித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என மீனாட்சி லேகி கூறினார்,
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்தை ஆதரிக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, “அவரது நிலைப்பாடு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை’ என்றார் மீனாட்சி லேகி.
-http://www.dinamani.com
இவங்க வேலையே இதுதானே …..
எவங்க வேலை எது என்று விளங்கவில்லை.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்க்காணலை நான் கண்டு கேட்டேன். நேர்க்கானப்பட்டவர் தமது இளம் வயது முதலே பல சவால்களுக்கிடையில் தன்னை புகழ்பெற்ற செல்வந்தராக உயர்த்திக்கொண்டவர். ஒரு முறை அவர் கொல்கத்தாவுக்கு தனது தொழில் காரணமாக சென்றிருந்தாராம். அந்த சமயத்தில் அன்னை தெரேசாவையும் சந்திக்க எண்ணி அவருடைய ஆசிரமத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அன்னை அவர்கள் அந்த வேளை அங்கிருப்பதாகவும் அவரை சந்திக்க வரலாம் என்றும் அறிந்து மகிழ்ச்சியுடன் விரைவாக தன்னை தயார்படுத்தி தன்னோடு தமிழ் நாட்டிலிருந்து வந்த தன் நண்பர்களிடமும் கூறி அவர்களையும் தன்னோடு செல்ல அழைத்தாராம். அவரின் நண்பர்களோ ஆச்சரியத்துடன் அவர்களை நாம் இவ்வளவு எளிதாக காண முடியுமா என்று வியந்தனராம். பிறகு அவர்கள் அனைவரும் அன்னை தெரேசாவின் ஆசிரமத்திற்கு சென்று, அவர்கள் வந்த நோக்கத்தையும் அங்கிருந்த முகப்பு சகோதரியிடம் கூறினார்களாம். அந்த சகோதரியும் அன்னை அவர்கள் சிறுது நேரத்தில் அவர்களை சந்திக்க வருவார் என்றாராம். வந்தவர்கள் அனைவரும் அங்கு எறும்புபோல் தத்தம் பணிகளை செய்தவண்ணம் இருந்த சகோதரிகளின் கவனித்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தனர்ராம். அந்த சகோதரிகள் அங்கும் இங்குமாக சுறுப்புடன் இயன்கினராம். சிறுது நேரத்தில் ஒரு சகோதரி அவர்கள் இருந்த இடத்தில் வந்து அமர்ந்தாராம். வந்தவர்கள் அவர்தான் அன்னை தெரேசா என்று உணரவில்லை. அவரும் மற்ற பணியில் ஈடுப்பட்டுள்ள ஒரு சகோதரி என்றே என்று நினைத்தனராம். அன்னையை பிரத்தியோகமாக காண சென்ற செல்வந்தர் தன்னை தங்க ஆபரனகளாலும் விலை உயர்ந்த கற்களாலும் அலங்கரித்து சென்றிருந்தாராம். அருகில் அமர்ந்த அனை அவர்கள் தன்னை அறிமுக படுத்தியதும், அந்த செல்வந்தர் தன்னையும் மீறிய ஆர்வத்தில் அன்னை அவர்களை கட்டி பிடித்து சிறுது நேரம் தேம்பி தேம்பி அழுதாராம். அந்த அளவுக்கு எளிமையாயிருந்தராம். அன்றைய நேர்கானல்போது அவர் எவ்வித ஆபரணமும் அணிந்தில்லை. சாதாரண வேட்டி,சட்டை மற்றும் மேல் துண்டும்தான். அன்னையை கண்ட நாள் முதல் தனது ஆபரணங்களை மட்டும் அல்ல தன்னுடைய தற்பெருமை,ஆணவம்,அகங்காராம் போன்ற அனைத்தையும் விட்டுவிட்டதாக கூறினார். ஆனால் அவர் ஒரு கிறித்தவராக தனது சமயத்தை இன்றுவரை மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு நல்ல மனிதராக மாறியிருக்கிறார். இது நமக்கு தெரிந்த ஒன்று. இன்னும் எத்தனை எத்தனையோ? இப்படியிருக்க அவர் மதம் மாற்றுவதற்காக தனது சேவையை பயன்படுத்தினார் என்று எவ்வாறு கூற முடியும்? நம் நாட்டில் கூட எத்தனையோ லட்சக்கணக்கானோர் கிறித்தவர்களால் நடத்தப்பட்ட பள்ளிகளில் பயின்றனர். எத்தனை அல்லது எத்தனை விழுக்காட்டினர் தமது சமயத்தை விட்டு கிரித்தவர்களாயினர்? சமயம் என்பது தனி மனித சுதந்திரம். ஒரு சிலர் சமயத்திற்காக மட்டுமா தமது உறவுகளை விட்டு போகின்றனர். எத்தனை பேர் பணத்திற்காகவும், பதவிக்காகவும்,பகட்டுக்காகவும் மற்றும் எதற்கோ விட்டு விளகுகின்றனர். இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
மதமாற்றத்தில் ஈடுபட்டவர் அன்னை தெரசா – இந்த கூற்று முற்றிலும் உண்மை …ஆதாரம் நிறையவே இருக்கிறது ….
ஆன்மீகத்தில் இதுல்லாம் சாதரணமப்பா
“தான் மதமாற்றம் செய்யவே வந்ததாக அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்!” ஆனால் நாம் என்ன செய்தோம் ? துக்கி தலையில் வைத்து கொண்டு ஆடினோம். அதற்க்கு எதுவாக நோபல் பரிசு வேற அன்னை தெரசா அவர்களுக்கு. இந்தியர்களில் நிறைய நல்ல ஆன்மீக மருத்துவர்கள் தாதியர்கள் இருந்தனர். பெண்கள் உட்பட. அன்னை சாரதா தேவி (பரமாம்சரின் மனைவி) காரைக்கால் அம்மையார், அவ்வையார் (7 ஆம் நூற்றாண்டு), இப்படி நிறைய அடிக்கி கொண்டே போகலாம் இன்றைய நிலையில். ஆனால் நாம் என்றைக்கு யோசித்தோம் ?
இதனால் அறிவிப்பது என்னவென்றால்: கிறிஸ்துவர்களுக்கு எதிராக பேசுவதற்கு ஓர் அற்புதமான – அருமையான சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். மனதில் உள்ளவைகளைக் கொட்டிவிடுங்கள். எவ்வளவு நாளைக்குத்தான் மனதில் வைத்து புகைந்து கொண்டிருப்பது? ஔவையாருக்கு நோபல் பரிசு கொடுக்காதது வெள்ளையர்களின் துரோகம் தானே! இப்படி எவ்வளவோ சொல்லலாம், தொண்டைப்பற்றி அறியாதவர்கள் தான் “அன்னை தெரேசா” என்று அளக்கின்றனர்! இதெல்லாம் ஒரு வெடிகுண்டுக்கு ஈடாகமா!
மதம் மாற்ற வந்தாலும் யார் மாற சொன்னது? எல்லாம் நம் இந்து சமயத்தில் உள்ள ஜாதி வெறி — இந்த நூற்றாண்டுகளிலே இப்படி என்றால் அப்போது? நினைக்கவே சிலிர்க்கிறது. இந்தியாவில் நடக்கும் அநியாயங்கள் கட்டில் அடங்கா. இதன் காரணத்தினாலேயே தென்கிழக்கு ஆசியா முஸ்லிம் ஆக மாறியது. இல்லாவிடில் ஆசியாவிலேயே இந்து சமயம் பெரும்பான்மை அடைந்து தீவிரவாதம் இல்லாமல் இருந்திருக்கும்.
அன்னை திரிசா வுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அவர் கிறிஸ்துவத்தை பரப்புவதை மட்டும் குறிக்கோளாக
கொள்ளவில்லை அதனையும் மீறி ஒரு மானிட நேயம் இருந்தது
ABRAHAM TERAH இது இன்றோ நேற்றோ ஆரம்பிக்கபடவில்லை கிருத்தவத்தை ஒழிக்க, அதன் துவக்க காலம் முதல் முயற்சிகள் மேல் கொள்ளப்பட்டுவந்தது வரலாற்று உண்மை. அவ்வளவையும் தாண்டி இன்னமும் பலவகை நற்காரியங்கள செய்தவண்ணம் உள்ளனர். ஒரு சில கிறித்தவர்கள் தங்களுடைய போதனைக்கு விரோதமாக செயல்படலாம். அது சுயநலம். இதுபோன்றோர் எல்லா சமயத்திலும் (மதத்திலும்) உண்டு. சமய சார்பற்ற திருக்குறள் எண்ணற்ற நற்போதனைகளை தந்தாலும், அதன் மூலமான தமிழர்கள் (அனைத்து சமயத்தினரையும் உள்ளடக்கி) அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றோமா?அதனால் திருக்குறளும் மறையவில்லை, தமிழரும் மறைந்துவிடவில்லை. ஆக தாங்கள் கூறுவது போல விமர்சிக்க புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வெளுத்து வாங்கட்டும். நியாமாக விமர்சிக்க வேண்டும். எதோ பலர் அடிக்கிறார்கள், நானும் என் பங்கிற்கு தர்ம அடி கொடுக்க முடிவெடுத்து வீம்புக்கு செய்யக்கூடாது. இறைவன் நம் எல்லோரையும் வெகுவாக ஆசீர்வதிப்பாராக.
உண்மையை எவ்வளவு காலத்திற்கு முடி மறைக்க முடியும்…. திரேசா உண்மையில் யாரையுமே தனது மதத்திற்கு மதம் மாற்றாமலே தனது மனித நேய சேவையை செய்திருக்கிறார் என்றால் அவர் போற்றுதலுக்குரியவர்தான். அவரின் சுயநலம் அதில் ஒளிந்திருந்தது என்பதை யாரால் மறுக்க முடியும். சண்டாளி இந்து சாம்ராஜ்யத்தையே அழிக்கு துணிந்தவர்களில் இவளும் ஒருத்தி என்பதை எதனை பேர் பூசி முழுகினாலும் உண்மை வெளிபட்டே தீரும். சாதியை இங்கு காரணம் காட்டுவது மடமை. இன்னமும் நம்மில் தாழ்த்தப் பட்டவர் நிறையவே உள்ளனர் அவர்கள் என்ன சாதிக்கு பயந்து மதத்தை மாற்றிக் கொண்டார்களா என்ன…. உழைப்பில் நம்பிக்கையை வைத்து முன்னேற வில்லையா…..? எப்பவுமே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். யாருமே தாமாக மதத்தை மாற்றிக் கொள்வது கிடையாது. இந்துவாக ( படிக்காத ) இருக்கிறவர்களிடம்…. இந்து கொள்கைகளை பற்றி தவறான கருத்துகளை சொல்லி ;இழிந்து பேசி மதம் மாற்றி வைப்பதும். ஏழைகளாக இருப்பவர்களிடம் அரிசி பருப்பு ரொட்டி என கொடுத்து மதம் மாற்றியதும் நிறைய பார்த்திருக்கிறோம். இந்துகள் விழித்துக் கொள்ள வேண்டும்,… இப்படி மதம் மாற்ற வருபவர்களை கையில் கிடைப்பதை கொண்டு அடித்து விரட்ட வேண்டும்.
துவாரகன் அவர்களே, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் ஒரு சிறு நெருடல். மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பகுதியின் தலைவராக இருந்த ஒருவர் கிறிஸ்துவராக மதம் மட்டும் மாறவில்லை. அங்கு வேலை செய்த மற்றப் பேராசிரியர்களையும் மதம் மாற “கையில் கிடைப்பதைக்கொண்டு” விரட்டு விரட்டு என்று விரட்டிக் கொண்டிராந்தாரே! அத்தோடு மட்டுமல்ல தமிழ்ப் பகுதிக்கே ஆப்பு வைத்துவிட்டுப் போய்விட்டாரே! இதையும் இனி சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்!
துவாரகன், abraham terah கவனத்தை ஈர்க்கின்றேன். ஆதி கிறித்தவம் கி.பி.முதலாம் நூற்றாண்டிலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டது என்பதும் வரலாற்று உண்மை. ஆக கிறித்தவ போதனைகள் தென் இந்திய மக்களிடையே பரவி இருந்ததும் வரலாற்று உண்மையே. அந்த காலத்தில் வந்த இயேசுவின் சீடர் புனித தோமையார் வரும் பொழுது தன்னிடம் இயேசுவின் போதனை என்ற செல்வத்தை மட்டுமே கொண்டு வந்தார். எண்ணிக்கையில் கிறித்தவர்களை உயர்த்த அவர் வேறு எந்த செல்வத்தையும் பயன் படுத்தவில்லை. எவரையும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றவில்லை. இயேசுவின் போதனையை ஏற்றுக்கொண்டவர் தம்மை அதனில் இணைத்துக்கொண்டனர். அன்று அவர்கள் கிறித்தவர்கள் என்று அழைக்கப்படவுமில்லை. இந்தியாவில் மட்டும்மல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் இதே நிலைதான். கிறித்துவுக்கு பின் பல ஆண்டுகளுக்கு பின்தான் இயேசுவின் போதனையை ஏற்றுக்கொண்டவர்களை மற்றவர்கள் கிறித்தவர்கள் என்று குறிப்பிட்டனர். கிறித்தவம் ஐரோப்பாவிலிருந்து தோன்றியது அல்ல. அங்கேயும் பலவித எதிர்ப்புகள் சவால்கள் ஆகியவைகளை தாண்டி வளர்ந்து வந்துள்ளது. அந்த போதனைகளை முளையிலேயே அழித்துவிட வேண்டுமென்ற எத்தனையோ அரசுகள் முயன்று இறுதியில் அவைகளே அதனை ஏற்று ஆதரிக்கவும் தொடங்கினர். ஆனாலும் புல்லுருவிகள் எல்லா இடத்திலும் நேரத்திலும்,சமூகத்திலும் இருப்பார் அதனால் நல்லவரையும் சாடுதல் முறையன்று. ஒரு பெரிய வெள்ளை பலகையில் ஒரு சிறு கருப்பு பார்த்து, அந்த பலகையே கருப்பு என்று சொல்லக்கூடாது. அவர்களின் நல்ல செயல்களாலும் சொற்களாலும் ஈர்க்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை வழியை ஏற்றுக்கொள்பவர்கள் அநேகர். அது அவரவரின் விருப்பமும் சுதந்திரமுமாகும். அந்த போதனையை ஏற்றுக்கொண்டவர்கள் வெள்ளை பலகை போன்ற செய்யும் மிக பெரிய நல்ல செயல்களை மறைத்து ஒரு சிறு கருப்பு புள்ளியை விளம்பரம் படுத்துவது எவ்வாறு ஞாயமாகும்? தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு வித்திட்டவரே ஒரு கிறித்தவ பாதிரியார் என்பதை மறக்க முடியுமா? ஏன் நம் நாட்டு ம.இ.க. தோற்றுவித்தவரும் ஒரு கிறித்தவர் என்பதாவது தெரியுமா? இன்று அந்த ம.இ.க.வில் எந்த கிறித்தவனாவது தலைமை நிலையில் அமர முடியுமா? அதற்காக அந்த சமயத்தை சார்ந்தவர்கள் இன்றுவரை எவ்வித சலுகையும் கேட்டதுண்டா? கல்லை எரியும்முன் யோசியுங்கள். கிறித்தவ மறையை சார்ந்தோரும், இஸ்லாம் மறையை சார்ந்த முஸ்லிம்களும் கூட தமிழுக்கு ஆற்றிய அரும்பெரும் தொண்டினையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம் வழிபடும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் மொழியால் இனத்தால் நாம் தமிழரென்று இணைவோம், நலம் காண்போம். வள்ளுவர் கூற்றுகேட்ப்ப கடும் சொல் தவித்து இனிய சொற்களால் ஒருவரொருவரை ஏற்று நலமுடன் வாழ இறைவன் நம்மை ஆசீவதித்து வழிநடத்துவாராக.