அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர்!– இலங்கைக் கடற்படை

fisherman05அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என வடக்கு கடற்படை நிiவேற்று அதிகாரி ரியர் அட்மிரால் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இரு நாட்டு மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை.

இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சில ரோந்து படகுகள் பழுதடைந்திருந்த காரணத்தினால் அண்மைய நாட்களில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் மந்த நிலைமை காணப்பட்டது.

எனினும், தற்போது ரோந்துப் பணிகளில் ஈடுபட படகுகள் காணப்படுகின்றன.

எனவே தொடர்ச்சியாக அத்து மீறல்களில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீனவர்களை கைது செய்வது தொடர்பில் இலங்கை அல்லது இந்திய அரசாங்கம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ரியர் அட்மிரால் திஸாநாயக்க அண்மையில் கச்சதீவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: