எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
”எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இலங்கை பிரதமரின் பேச்சு திட்டமிட்டு பெரிதுபடுத்தப்படுகிறது.
பிரதமர் மோடியின் பயணம் குறித்து ஆலோசனை நடத்த இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 13-ம் திகதி சுற்றுப் பயணம் செல்ல உள்ள பிரதமர் மோடி ஆகிய இருவரும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு முடிவு காண்பார்கள்.
எனவே, இடைப்பட்ட பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பேச்சுவார்த்தைக்குப் பிறகு வரும் முடிவுக்கு முக்கியத்துவம் தருவோம்.” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்க மாட்டோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க கூறியிருந்தார்.
ரணில் பேச்சுக்கு பல தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-http://www.tamilwin.com
ஆமாண்டா பொன் ராதா கிருஷ்ணன் , ரணில் சுட்டு தள்ளுவோம் என்றது மலையாளிகள் அல்ல தமிழர்கள் தானே ! இரண்டு மலையாளிகளை சுட்டு தள்ளிய இத்தாலி காரனை டெல்லி நீதி மன்றம் ஏற்றினீர்கள் , 740 தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை அரசை என்ன செய்தீர்கள் ?
அடிமைத் தமிழனாக வாழ விரும்பும் பொன் இராதாகிருஷ்ணன் பெரிது படுத்தாமல் இருப்பார். தன்மானத் தமிழன் மத்திய மந்திரியாக இருந்தால் ரனில் விக்கரமசிங்கேக்கு சொல்ல வேண்டியதெல்லாம் ‘நீங்கள் சுடும் போது இந்திய இராணுவம் கை சூப்பிக் கொண்டிருக்காது” என்பதே. இதை சொல்ல முடியாத நீர் எல்லாம் ஒரு மக்கு மந்திரி!.