மருத்துவ முறைப்படி மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும் இந்திய கழிப்பறைகளே சிறந்தவை என சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டாக்-வி.எச்.எஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் விழாவில் சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ பேசியது: இயற்கையாகவே மனித உடலுக்கு அனைத்து வகையான நோய்களையும் சரிசெய்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. அதனை சரியான விதத்தில் தூண்டிவிட்டு குணப்படுத்துவதுதான் பைடா-லாஜின் எனும் சீன மருத்துவ முறை ஆகும்.
இந்த மருத்துவ முறையில் உள்ளங்கையைக் கொண்டு முழங்கையின் மேல்பகுதி, கால் முட்டிகளின் பின்பகுதி, பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தட்டுவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம்.
இந்த மருத்துவமுறையில் சரியான விதத்தில் உட்காருவது கூட ஒருவித சிகிச்சை ஆகும்.
எனவேதான், மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும், இந்தியக் கழிப்பறைகளே பயன்படுத்த சிறந்தவையாக உள்ளன. ஏனெனில், ஆங்கில கழிப்பறைகள் மனித உடற்கூறு அமைப்புக்கு எதிரானவையாக உள்ளன என்றார்.
-http://www.dinamani.com