“மீனவர்களை நீங்கள் சுட்டால் நாங்களும் சுட வேண்டி வரும்” ரணிலின் கருத்துக்கு இந்தியா உத்தியோகபூர்வ எதிர்ப்பு

இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இலங்கைப்

susma

பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கருத்து தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் சுட்டுக் கொலை செய்வதனை நியாயப்படுத்தினால் இரு தரப்பும் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடத்த நேரிடும் எனவும் சுவராஜ் கடுமையான எச்சரிக்கை விடுத்தள்ளார்.

இலங்கையுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வரையில் ஆழ் கடல் மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஈடுபட வேண்டுமென பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

-http://sankathi.com

TAGS: